உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆறுமாதக் கடுங்காவல் ளம் 79 நிலைமைகளுக்கிடையிலும் சுற்றிச் சுற்றி பிரசாரப் பணி புரியும் சுழல் விளக்கு. இளைத்த உடல் - வலுத்த உள்ள அந்த இளைஞரேறு அறப்போர் முனையிலேயிருந்து ஆவன செய்தார். வீரர்களுக்கு ஆர்வமூட்டினார். இலட்சியக் கதை களைப் பேசிப்பேசி அந்த ரவை ஓட்டினோம். அவர், நான், மணி, அம்பில், சத்தி, முத்து, கண்ணதாசன், பையா, C. D.மூர்த்தி ஆகியோர்! ராமசுப் ஜூலை 15! விடிவெள்ளி முளைத்தது - வீழ்ந்த திரா விடத்திற்கும் விடுதலை உதயமாகப் போகிறது என்பதை அறிவிப்பதுபோல! சேவல்,"கொக்கரக்கோ' எனக் கூவிற்று; அது எல்லோரும் "புறப்படுங்கோ!" என்பதுபோல் இருந்தது. செங்கதிரோன் எழுந்தான் வெங்கு நதி தனிற் அமழ்ந்து வீரஞ் செய்கின்ற மூச்சோடு தமிழகமே எழுந்தது. தமிழர்மீது தருக்கு மொழி வீசுவது வடவர்க்கு வாடிக்கை -ஆனால் வரலாறு சொல்கிறது; தருக்குமொழி பேசியோர் தலையொடியக் கல் சுமந்தனர் என்று! வரலாற்றை மறந்தனர் வாடிக்கையை மறக்கவில்லை! அந்த வடநாட்டார்க்கு எச்சரிக்கை செய்வோம். ∞ கடல்! ஏ! தமிழ் நிலமே! எழுந்திரு ! என முழங்கியது கட கடலின் கொந்தளிப்பு உள்ளத்திலே! காலைக் கதிரவ னின் நிறம் கண்களிலே! சேவலின் மிடுக்கு நடையிலே ! தமிழர் பட்டாளம் எழுந்தது! எழுந்தது! எவரும் எமக்கு இணையில்லை - எனக் கூறி எழுந்தது!