உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

86 கருணாநிதி புகைவண்டி 6 கூ என்று ஊளையிட்டது. என்ஜி னில் ஒலி கிளம்பியது. சக்கரங்கள் சுழன்றன. ஓரத்திலே நின்றிருந்த மக்கள் கண்ணை மூடிக்கொண்டனர். படுத் திருந்த நாங்கள் எங்களைத் தயார் படுத்திக்கொண்டோம். தேசத்தொண்டர்கள் நடத்தும் தியாக யாத்திரைக்கு தயாராகிவிட்டோம். கடைசியாக ஒரு முறை கதிரவனைப்பார்த்தேன் - கல் லக்குடியைப் பார்த்துக்கொண்டேன் என்னை சீராட்டிய திராவிட மாதாவை ஆசை தீரப் பார்த்துக்கொண்டேன் எதிரே நின்ற திராவிடர்களையும் பார்த்துக்கொண்டேன்- எல்லாம் நொடியில் முடிந்தது - கண்ணை மூடிக்கொண் டேன். சாவின் இன்ப முத்தத்திற்கு கன்னத்தை - தயார் படுத்திக்கொண்டோம் எல்லோரும்! ஆம் - ஐவரும்! கட கட வெனக் கிளம்பிய புகைவண்டி நகர்ந்ததை உணர்ந்தேன்! - ' திராவிடம் வாழ்க' என இருதயம் உச் சரித்தது! - ஒரு சப்தம் மீண்டும்! கண்ணைத் திறந்தேன்- உயிரோடிருந்தேன்! அதை உணர்ந்தேன். சிறிது துரத்தி லிருந்த புகைவண்டி என் உடலை ஒட்டினாற்போல் நின்று கொண்டிருந்தது. மீண்டும் அதிகாரிகள் வந்தனர். >> என்ன வென்றனர். " முடிவைத்தான் எதிர் 'முடிவு பார்க்கிறோம் " என்றேன். "சரி எல்லோரும் கைது செய்யப்படுகிறீர்கள் " என்றார்கள். எழுந்தோம். உடனே -மிச்சமுள்ள நண்பர் ள் - என் படைவரிசையினர் ch கைது படுத்தனர். அவர்களும் செய்யப்பட்டனர். இருபத்தைந்துபேரும்