பக்கம்:ஆற்றங்கரையினிலே.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாகேச்சரம் #22

கருதினார் அப் பெரியார் அமைச்சர் பதவியினின்றும் நீங்கி அமைதியாகத் தம் ஊரிற் போந்து வாழுங் காலத்தில் திருநாகேச்சரத்தை நாள்தோறும் வணங்குதல் இயலாதே என்று எண்ணி வருந்தினார். அக்குறையை நீக்குவதற்கு ஒரு வழி தேடினார்: குன்றத்துனரின் அருகே திருநாகேச்சரம் ஒன்றை அமைக்கத் துணிந்தார். நல்ல வழியில் ஈட்டிய பொருள் அனைத்தையும் நாதன் திருப்பணியில் செலவிட்டார். தொண்டை நாட்டிலே ஒரு நாகேச்சரம் sigsr rtff.?

ஈச்சரம் என்னும் பெயருடைய ஊர்கள் தமிழ் நாட்டில் பலவாகும், ஈசன் கோயில் ஈச்சரம் எனப்படும்?மன்னரும் முனிவரும் முன்னாளில் ஈச்சரம் எடுத்தனர். காவிரிப்பூம் பட்டினத்தில் பல்லவ மன்னன் கட்டிய திருக்கோயில் பல்ல வணிச்சரம் என்று பெயர் பெற்றது. தஞ்சையம்பதியில் இராசராசன் கட்டிய பெருங்கோயில் இராசராசேச்சரம் என்று வழங்கப் பெற்றது. இந்த முறையில் நாகர் தலைவன் ஒருவன் நிறுவிய சிவாலயம் நாகேச்சரம் என்று அழைக்கப் பட்டது போலும். திருநாகேச்சரம் என்ற கோயிற் பெயர் நாளடைவில் ஊர்ப்பெயரும் ஆயிற்று.

அவ்வூரில் பழமையான திருமால் கோயிலும் உண்டு. திரு விண்ணகர் என்பது அதன் பெயர். பண்டைத் தமிழ் நாட்டிலே பல விண்ணகரங்கள் விளங்கின. காஞ்சி மாநகரில் பரமேச்சுரப்பல்லவன் கட்டிய திருமால் கோயில் பரமேச்சுர விண்ணகரம் என்று பெயர் பெற்றது. கும்பகோணத்திற்கு அருகே நந்தி மன்னன் எடுத்த திருக்கோயில் நந்திபுர விண்ணகரம் என்று அழைக்கப் பெற்றது. இவ்வாறு அமைந்த விண்ணகரங்களுள் சாலப் பழமையும் பெருமையும் வாய்ந்தது திருநாகேச்சர விண்ணகரம். ஆதலால், அது திருவிண்ணகர் என்று சிறப்பிக்கப்பட்டது.” .