பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 வல்லிக்கண்ணன் படிமிசை வாழும் பழங்கொள்கை - - தகர்த்திடுவோம்! நடிக்கின்றார் குபேரனாக நல்ல உழைப்பாளி இடிக்கின்ற துன்பம் இனிதேற்கும் தீமையினை நொறுக்கிடுவோம்! அந்த நுட்பமான கொள்கைகளைத் தறுக்குடன் கொல்வோம்! தனி உடைமை தான் தகர்ப்போம்!. எது உடைமை என்றே இன்னும் அறியார்க்குப் பொதுவுடைமை ஒன்றே போற்று கொள்கை யென்போம்!” இவ்வாறு இன்னும் பல எண்ணங்களை ஒலிபரப்பும் பேருரையாக அமைந்துள்ளது அது. 'தாய் மண் அரசர், மற்றும் அரச குடும்பத்தினர் பற்றிய கதையை சொன்ன போதிலும், வீரமகனின் நெஞ்சுத் துணிவையும் தாய்ப் பாசத்தையும், தாய். மண்ணின் மீது அவன் கொள்ளும் பற்றுதலையும், நாட்டு மக்களின் நலனுக்காக ஆள்வோர் மேற்கொள்ளவேண்டிய கொள்கைகளையும் எடுத்துக் கூறும் நல்ல காவியமாக, விளங்குகிறது. . பெருங்கவிக்கோவின் இரண்டாவது நெடுங்காவியம் "மலைநாட்டின் மீதினிலே’ என்பதாகும். இது ஒரு. புதுமையான படைப்பு. சமகால வரலாறு, பயண அனுபவங்கள், கற்பனைக் கதை என மூன்று அம்சங்களை இது தன்னுள் கொண்டிருக்கிறது. . மலேசிய மாமுனி- தமிழ்ப் பணியாளன், தவநெறியாளன்-சுவாமி இராமதாசரின் மணிவிழாவில் கலந்துகொள்வதற்காக, சிறப்பு அழைப்பின் பேரில்மலேசியா சென்றார் பெருங்கவிக்கோ. மூன்று மாத காலம் அங்கே தங்கி, மலேசியாவின் பல பகுதிகளுக்கும். சேன்று தமிழ்ப்பணி புரிந்தார்.