பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/187

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் 3 177 வண்ண எழில் வண்ணங்கள் மாறும்; மேலும் வர்ணசாலங்கள் தோறும் எண்ணங்கள் மீறும்; எங்கும் இனிமையின் இனிமை பூக்கும்: பண்ணிசை அருவி வெல்லும் பாய்ந்திடும் நயகராவின் தண்மதி கணக்கில்லாமல் தாகத்தைத் தீர்க்கு மம்மா!’ வெண்ணிலா கோடி சேர்ந்தே, நயத்தகும் ஒளி வெள்ளத்தை நாளெலாம் தெளித்ததைப் போல், வயப் படும் இயற்கை தந்த வனப்பினை பெருங்கவிக்கோ பாடி யுள்ள திறத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும். கவிஞர் உரைநடையில் எழுதியுள்ள பயண நூல் களிலும் வகைவகையான கவிதைகளை இணைத்திருக் கிறார் இயற்கைக் காட்சிகளின் வர்ணனைகள், இலட்சிய முழக்கங்கள், உலக ஒற்றுமையை வலியுறுத்தும் பாடல்கள் அவற்றில் உண்டு. மாநாட்டில் மலர்ந்த கவிதை ஒன்று குறிப்பிடத் தகுந்தது. நீண்ட கவிதையின் சில பகுதிகள் மட்டுமே. இங்கு தரப்படுகின்றன. யாதும் ஊரே யாவரும் கேளிர் ஒதும் முன்னோன் தமிழன் இந்தியன் யாதிலும் ஆசை மாசை அகற்றென தேசம் புகன்றவன் புத்தனடா! இந்தியச் சிற்பி அவனே சித்தனடா! இனத்தால் மொழியால் ஏற்றத் தாழ்வால் இணையில் வையம் அழிவதோ-ஒங்கும்