பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் 2: பம்பிக்கை பார்ப்பார்தம் பாதகத்தில் வீழ்ந்துகெட்டோம் நம்பித் தமிழரெல்லாம் நன்னடைதே ரெம்பாவாய்' மானமில்லார் நம்மறிஞர் மாத்தமிழ் வாழ்வெண்ணார் ஈனமில்லாப் பாவலர்கள் பாப்புனைத லோடுசரி ஞானமில்லா மக்களுக்கோ நாளெல்லாம் கீழ்வழக்கு! தானமில்லாச் செல்வரிங்கே தண்டமிழை யாரறிவார்? மோன மில்லா யோகியர்க்கோ மூச்சடக்கும் வாசிநிலை ஆனநிலை ஈதானால் அன்னைமொழி காப்பார்யார்? வானமுயர் வையமுயர் வண்டமிழ்க்குச் சக்தியுண்டு போனதமிழ் ஆற்றல்பெறப் பூத்தநடை எம்பாவாய்!” 'காடு மணக்கும் கழனியெல்லாம் மணக்கும் வீடு மணக்கும் விளைவெல்லாம் பூமணக்கும்