பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1

“பாட்டுப் புத்தகம் பத்துக் காசு!”


திருவாளர் மெய்கண்ட பிள்ளைவாளுக்கு ஜாகை திருக்காட்டுப்பள்ளியில்தான் என்றாலும், அவரது சொத்து-பத்து மட்டும் தஞ்சாவூரில்தான் ஏகமாகச் செழித்துத் தழைத்து வந்தன. இதுதான் உண்மை. ஆனல், இதைக் காட்டிலும் இன்னொரு பெரிய உண்மையும் அவரது பிறந்த மண்ணில் வாசம் இருந்தது. அது, மண் வளம் கொழித்திடும் திருக்காட்டுப்பள்ளி வயல்களிலேதான்; நெல் மணிகளோடு அதிர்ஷ்டச் சுடர்களும் விளையலாயின. விளைந்தது ஓரிடம், விதைத்தது மற்றோர் இடம். இருக்கட்டுமே!

திருவாளர் மெய்கண்ட பிள்ளை மெய்யை வாழ்த்தி வணங்குபவர். இந்த விஷயம் துல்யமான நிஜம் என்பது புலனாக, வழிகள் பல திறந்து வைக்கப்பட்டிருக்கும். 'வழிகள் என்றால், எந்த வழிகள்’ என்றுதானே திகைக்கிறீர்கள்? பேஷ்!

போகும் வழிக்குப் புண்ணியம் சம்பாதிக்க வேண்டியதே தமது லட்சியம் என்பது பிள்ளைவாளின் அழுத்தமான கருத்து. அதன் நிமித்தமே அவர், உண்மை வழிபாட்டு வழிகளிலே தீவிரமான கவனம் செலுத்தி வந்தார். அதற்கான செயல்களில் இறங்கி நிற்கையில்தான், அவருக்கு அவரது தந்தையின் 'டாகீஸ்' கட்டடம் ஒன்று கை