பக்கம்:ஆலயங்கள் சமுதாய மையங்கள்.pdf/128

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 தி குன்றக்குடி அடிகளார்

இறைவன் முதற் பொருளே

உயிர்கள், வாழ்வதற்கென்று அமைந்தது இந்த உலகம். இந்த உலகம் இயற்கை, இது கடவுளால் படைக்கப்பட்ட தன்று என்று கருத்தில் சைவசித்தாந்தமும் மார்க்சியமும் இசைந்த கருத்துடையனவாகவுள்ளன.

"நீல மேனி வாலிழை பாகத்து

ஒருவன் இருதான்் நிழற்கீழ்

மூவகை உலகும் முகிழ்த்தன முறையே’

என்பது ஐங்குறு நூற்றுக் கடவுள் வாழ்த்து. இப்பாடலில் குறிக்கும் "முகிழ்த்தன" என்கிற சொல தன் வினைச்சொல். அதாவது தாமே தோன்றின என்பதே கருத்து. இங்கு மூவகை உலகம் "அவன், அவள், அது" என்று கட்டப்படும் மூவுலகமே தவிர, பெளராணிகத்தில் கூறப்படும் கட்புலனாகாத உலகங்களையல்ல என்பதை அறிக. ஆதலால் உலகம் தோற்றுவிக்கப் பெற்றதன்று. திருக்குறளும் கூட, உலகத்திற்கு முதற்பொருளாகக் கடவுள் இருக்கிறான் என்று சொன்னதே தவிர, கடவுள் உலகத்தைப் படைத்தான்் என்று சொல்ல வில்லை.

"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உல்கு'

சைவ சித்தாந்தத்திலும் கூடக் கடவுளது திருவருட் சத்தியின் இயக்கத்தால் "மாயை' என்னும் அருவப் பொருளிலிருந்து உலகம் தோன்றி விரிவடைகிறது என்பதே கருத்து. என்றும் உளதாய் அருவமாய் ஒரு நிலையதாய் விளங்குவது மாயை என்று சித்தி கூறுகிறது.

2. ஐங்குறுநூறு - கடவுள் வாழ்த்து 30. திருக்குறள் - 1