பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 ஆலேக் கரும்பு அதுகூட வேண்டாம்; இந்த இன்பமே போதும் என்று தியாகம் பண்ணி நிற்பது அடுத்த கிலே. முன்னேயது முளைத்து வளர்ந்து மலர்ந்தது பின்னேய நிலை. -- இனி மலர்ந்து காய்த்துக் கணியவேண்டாமா? அருண கிரி நாதர் அந்தக் கனிந்த கிலேயைக் காட்டுகிருர், "வீடு என்று ஒன்று வேறே இருப்பதுபோல எண்ணி அதை இறைவன் தருகிறேன் என்று சொன்னலும் வேண்டாம் என்று சொல்லும் இயல்பு கிடக்கட்டும். வீடு என்பது வேறு ஏது? இறைவன் திருவடியை வழிபட்டு வாழும் இதுதானே வீடு? பக்தியால் வழிபாடு செய்வதே. நாம் பெறும் வீடு, வீட்டுக்கும் இதற்கும் வேறுபாடு இல்லை. இதுவே வீடு' என்று சொல்லும் கணிப்பதத்தை அவர் காட்டுகிருர், "ஆணபய பக்திவழி பாடுபெறும் முக்தியது வாகநிகழ் பக்தஜன வாரக்காரனும்" என்பது வேளைக்காரன் வகுப்பு. - “தம்மிடத்தில் முதலில் தோன்றிய பயபக்தியில்ை வளர்ந்த வழிபாடே தாம் பெறும் முக்தியாக அ1ை2:11, அதில் வாழ்கின்ற பக்த ஜனங்களின் அன்பைப் பெற்ற வன் என்பது இதன் பொருள், பக்தியை முக்தியதுவாக அநுபவிக்கிறவர்கள் அவர்கள்; நடைமுறையில் அப்படி நிகழ்கிறது. பக்தியை மார்க்கமென்று சொல்வது சாமான்ய அநுபவம். அதுவே சித்தியாக மாறுவது மிக மிக உயர்ந்த அநுபவம் அதனேயே பரிபாடலும், பெரிய புராணமும், திருவகுப்பும் எடுத்துச் சொல்லுகின்றன. பக்தி சித்தி காட்டி அத்தர் சித்தம் மீட்ட பக்தருக்கு வாய்த்த பெருமாளே” என்று திருப்புகழில் அருணகிரி நாதர் முருகனத் துதிக்கும்போது அவன், 'பக்தருக்கு வாய்த்த பெருமாள்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/54&oldid=744419" இலிருந்து மீள்விக்கப்பட்டது