பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு வரம் x ττ கொண்டாள். கமக்கு இவர் வேறு வரம் தருவது கிடக் கட்டும். இப்போது இந்தச் சந்திரனே ஒழித்துக் கட்டும் வரம் தாட்டும். சக்திரனே எடுத்து விழுங்கும் அரவும் பக்கத்தில் இருக்கிறது. பெரிய பாம்பாகவே இருக்கிறது. உயிரை வாங்கும் அரவாகிய இது. ம்ேமுடைய தலைவியின் உயிரை வாங்கும் திங்களே உண்டு அதன் உயிரை வாங்கட்டும் என்று அவள் கற்பனை விரிந்தது. கொஞ்சம் தைரியமாகவே பேசலாளுள் - - "சுவாமி, கொச்சையில் உள்ள பெருமானே! அழகான தேவியை இடப் பாகத்திலே வைத்திருக்கும் உமாபாகரே! உம்மிடத்தில் ஒரு வர்த்தை யாசிக்கிறேன். அதை நீர் தர வேண்டும். அது கொடுப்பதற்கு அரிய வரம் அன்று. மிக வும் எளிதிலே முடியக் கூடியது. அதற்கு ஏற்ற சந்தர்ப்பம் இது. உம்முடைய தலையில் இருந்து சிமிட்டுகிறதே இந்தப் பிறை, இது சாமானியமானதன்று. இது எவ்வளவோ பேருக்குத் துன்பத்தை உண்டாக்குகிறது. இதன் பக்கத்தில் அதே பெரிய டாம்பு புஸ் புஸ் என்று மூச்சு வாங்குகிறதே! அதற்கு கல்ல பசி போலிருக்கிறது. இந்தப் பாழும் பிறையை அந்தப் பாம்புக்கு இரையாக அளித்துவிடும், அதற்கு இருக்கும் பெரிய பசி போகும் உமக்கும் தல்ப் பாரம் குறையும் மான்போல மெல்லிய பெண் ஒருத்தி, எங்கள் வீட்டில் இருக்கிருள். அவள் இந்தப் பிறையாலே படுகிறபாடு கொஞ்ச நஞ்சம் அல்ல. அவள் உயிரைத் தினக் தோறும் இது கொல்லாமல் கொல்லுகிறது. அவளும் உயிர் பிழைப்பாள். இந்தச் சிறிய காரியத்தைத்தான் தேவரீரிடம் நான் கெஞ்சிக் கேட்கிறேன்." உடன் இருக்கிற அம்பிகையையும் அவள் கொஞ்சம் புகழ்ந்து வைத்தாள். நயந்திகழ் குங்குமக் கொங்கையை யுடைய உமாதேவியின் பாகத்தையுடைய பெருமானே!. என்று அவனே அழைக்கும்போதே அந்தப் புகழையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/83&oldid=744451" இலிருந்து மீள்விக்கப்பட்டது