பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/100

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


காணர்குல விளக்கு 57 என்று கவலை நிறைந்த உள்ளத்தோடு வினாமேல் வினாவாக அடுக்குகின்றார். பகவான் "பாணருடைய உள்ளத்தில் இருந்தேன்; அப்போது பட்ட காயந்தான் இது!’ என்று மறுமொழி பகர்ந்ததும் முனிவர் நடுங்கிப் போகின்றார். முனிவரே! அஞ்சற்க. இன்றைய தினம் நீர் அவரை நம்முடைய சந்நிதிக்குக் கொண்டு வருக!" என்று கட்டளையிடுகின்றான் அரங்கநகர் அப்பன். முனிவர் வியர்த்துப் போய் கண் விழித்துக் கொள்கின்றார். விடிந்து விட்டதாகத் தெரிந்து கொண்டார் முனிவர். கனவை எண்ணி எண்ணி வியப்புற்றார். "இன்றைய விடிவு நமக்கும் விடிவாயிற்று; இந்தப் பிறவி இன்றே பயன் பெற்றது!’ என்று தீர்மானித்ததும் தமது இதயமும் துரய்மையாகி விட்டது என்று உணர்ந்து கொண்டார். கடுநடையாகப் படித்துறையை நோக்கி வருகின்றார். நேற்றைய அநுபவத்தால், இன்று துறையருகில் வருவாரோ? வரமாட்டாரோ?' என்ற ஐயம் உள்ளத்தை வருத்துகின்றது. தொலைவிலிருந்து வீணையொலி அவர் காதில் விழுகின்றது. கடுகி வந்தவர் ஒடலானார். முந்தைய நாள் கண்ட இடத்திலேயே யாழும்கையுமாக நிற்கும் பாணரைக் காண்கின்றார்; களிகொள்ளுகின்றார். பாணரின் திருவாயினின்றும் பொங்கிவரும் திவ்விய கீதங்கள் வீணையொலியோடு ஒன்றுபடும்போது கல்லும் கரை கின்றது. புல்லும் உருகுகின்றது; பட்ட மரங்களும் தளிர் விடுகின்றன. தும்புரு இயக்கும் வீணையொலியோ? நாரதர் இயக்கும் வீணையின் நாதமோ? என்று செவியும் உள்ளமும் குளிர பாணரை நெருங்கி வருகின்றார் முன்வர். துளசி மணிகளால் இயன்ற தாழ்வடங்களை அணிந்து நெஞ்சம் நெக்குருக, கண்கள் ஆனந்த அருவி சொரியப் பாடும் பாடகரைக் காண்கின்றார், கீதமே ஒர் உருவங் கொண்டு சிந்திப்பதும் திகைப்பதும், நெளிவதும், கை கப்புவதுமாக இருக்கின்றதோ? என்று மயங்குகின்றார் கிாமுனிவர்.