பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/141

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


98. ஆழ்வார்களின் ஆரா அமுது மண்உண்டும் பேய்ச்சி முலைஉண்டும் ஆற்றாதாய் வெண்ணெய் விழுங்க வெகுண்டு ஆய்ச்சி.கண்ணிக் கயிற்றினால் கட்ட தான்கட்டுண் டிருந்தான் (91) என்ற பாசுரப் பகுதிகளில் இதனைக் காணலாம். கிருஷ்ணா வதாரம் எண்ணற்ற சேஷ்டிதங்களைக் கொண்டதாதலால் ஆழ்வார்கள் இவற்றில் தம்மையும் மறந்து ஈடுபடுவார்கள். இராமாவதாரம் : மூன்று ஆழ்வார்களும் இந்த அவதா ரத்தில் ஈடுபட்டு மகிழ்வதைக் காட்டுவேன். முதலில் பொய்கையாழ்வாரின் ஈடுபாட்டைக் காண்போம். சிலையால் மராமரம் ஏழ் செற்று (28) என்ற ஒரே இடத்தைத்தான் காணமுடிகின்றது. பூதத் தார் அதுபவித்த இடங்களாக, சென்றது இலங்கைமேல் செவ்வேதன் சீற்றத்தால் கொன்றது இராவணனை (23) வாளரக்கன் போல்வானை வானவர்கோன் தானத்து ள்ே இருக்கைக்கு உய்த்தான் நெறி (52) என்ற இரண்டே இடங்களைக் காணமுடிகின்றது. பேயாழ்வாரும், எய்தான் மராமரம் ஏழும் இராமனாய்; எய்தான்.அம் மான்மறியை ஏந்திழைக்குஆய் எய்ததுவும் தென்இலங்கைக் கோன்விழ (52) என்ற ஒரே பாசுரத்தில் இந்த அவதாரத்தை அநுபவித்து மகிழ்கின்றார். இந்த நிலையில் இராமாவதாரத்தில்