பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. 29. 30. oxy ஆவாரம் சூட்டுகின்ற சுப்புரெட்டி யாரென்னும் புலவர் கோமான் ஆழ்வார்கள் ஆரமுதைப் படைக்கின்றார் இந்நூலில் அழகு கூட்டி: எப்போதும் திருநீறு பொவிகின்ற திருமுகத்தார். இவரின் உள்ளம் தப்பேதும் இல்லாத சமரசசன் மார்க்கத்தில் தழைப்ப தாலே முப்புரத்தை எரித்தானும் திருவரங்கத் துறைவானும் முனைந்து பார்க்கில் ஒப்பென்றும் ஒன்றென்றும் ஒருகடவுள் தாமென்றும் உணர்ந்த மேதை. தன்மதமே உயர்வென்று சாதிப்பார் வாழுகின்ற தரணி தன்னில் தொன்னூலாம் திருக்குறளின் நெறிபோற்றும் கப்புரெட்டி யாரோ தூய நன்னெறியின் வழிப்படுத்தல் சமயங்கள் பணியென்னும் நம்பிக் கையால் பன்னுரலும் கற்றிடுவார் கற்றவற்றைப் பிறர்க்குரைத்துப் பயன்கொள் வாரே! ஆறுசொற் பொழிவுகளில் ஆழ்வார்கள் எட்டுப்பேர் அருமை பற்றிக் கூறுகின்ற முறைநோக்கின் சுப்புரெட்டி யார்சொல்லின் கூர்மை தோன்றும் பேறுவகை, வளர்ந்தமுறை, சோதனைகள் பரமபதம் பெற்ற வாறும் வீறுக.வி வெளிப்பாடும் இலக்கியமேம் பாடும்மிக விளக்கிச் சொல்வார்!.