பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/201

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


H58 ஆழ்வார்களின் ஆரா அமுது பழகுவதற்கும் விருப்பமற்று தனிமையில் ஓரிடத்தில் அமர்ந்து பரமசிவனைத் தியானித்து வருகின்றார். இந் நிலையில்தான் பேயாழ்வாரோடு தொடர்பு ஏற்படுகின் றது. திருமழிசையார் பற்றிய செய்தியறிந்த பேயாழ்வார் அவரிருக்கும் இடத்திற்கு எழுந்தருளுகின்றார். இவரை வைணவ சம்பிரதாயத்தின் முக்கியமானவராக்க வேண்டு மென்று திருவுள்ளம் பற்றுகின்றார். இவரது ஆசிரமத்துக் கருகில் தானும் ஒர் ஆசிரமத்தை அமைத்துக் கொள்ளு கின்றார்; நந்தவனத்தையும் ஏற்படுத்திக் கொள்ளு கின்றார். ஒரு நாள் பூஞ்செடிகளையும் திருத்துழாய்ச் செடிகளையும் பிடுங்கித் தலைகீழாக நட்டுப் பல பொத்தல் களையுடைய ஒட்டைக் குடத்தையும் அறுந்த தாம்பையும் கொண்டு செடிகட்கு நீர் வார்க்கத் தொடங்குகின்றார். கண்டவர் நகையாடுவதற்குரிய இச்செயலைப் பார்த்துச் சிவவாக்கியர் கை கொட்டிச் சிரித்து, பேயாழ்வார் இருக்கும் இடம் சென்று, :செடிகளைத் தலைகீழாக நடுகின்றீர்; இல்லிக் குடத்தைக் கொண்டும் செடிகட்கு நீர் வார்க்கின்றீர்; நீர் பித்தரோ? பேயரோ?' என்று கேட்கின்றார். தம்முடன் வந்தவர்கட்கும் இச்செயலைச் சுட்டிக் காட்டுகின்றார், பேயாழ்வரோ புன்முறுவல் பூத்த முகத்துடன் அமைதியாகத் திரும்பிப் பார்த்து, சமயங்கள் தோறும் நுழைந்து நுழைந்து ஒன்றிலும் நிலை கொள்ளாத நெஞ்சினராய், உள்ளுக்குள்ளே நம்பிக்கையின்றி, சேர்ந் தவர்கட்கெல்லாம் இரட்சகர் என்று விருதுகட்டிக் குதர்க்கம் செய்வதே பொழுதுபோக்காகக் கொண்டு அருமையான தமிழ்ச் சொற்களை வாரி வீசி எத்தனையோ நெஞ்சங்களைப் பு: ண் ப. டு த் தி உலகத்தைச் சுற்றி வருகின்றீரே! இங்ங்னம் வாணாளை வீணாளாகக் கழித் துழன்று அட்டகாசம் செய்து வருகின்றிரே! நீரே உன்மத்தர்! உம்முடைய உன்மத்தத்தைச் சுட்டிக் காட்டவே இப்படிச் செய்கின்றேன்! என்று மறுமொழி பகர்கின்றார். வைராக்கியச் சுடராகத் திகழ்ந்த பேயாழ்வாரின் முக விலாசமும் கண்களும் சித்தரை ஈர்த்து விடுகின்றன. தகம்