பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/251

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


2:3 ஆழ்வார்களின் ஆரா அமுது. பரிசாரகர் முதலிய கோயிலில் அந்தரங்கமாகப் பணியாற்று. வோர்களைப் பிடித்துப் பலவாறு தண்டித்து வருத்து கின்றனர். ஆனால் ஒருவர் மீதும் குற்றம் காணப் பெற வில்லை. மேலும் புலன் விசாரித்து வருகையில் தேவ தேவியின் திருமாளிகையில் அந்த வட்டில் இருப்பதாக அவ் வீட்டுப் பணிப்பெண் ஒருத்திமூலம் செய்தி கிடைக்கின்றது. அரசு ஆட்கள் தேவதேவியின் வீட்டிலுள்ள அனைவரையும் குற்றவாளிகளாக்கி அரசரின் முன்னர்க் கொண்டு போய். திறுத்துகின்றனர். அப்போது அரசன் , தேவதேவியை நோக்கிப் பெருமாளின் பொன்வட்டிலை நீதானே களவாடினாய்?’ என்று கேட்கின்றான். அவள், யான் இந்த வட்டில் இன்னாருடையது என்பதை அறியேன்; அழகிய மணவாள தாசன் என்பானொரு தூதன் மூலமாக, விப்ர நாராயணர் எனக்கு இதனை அனுப்பினார். இது தான் யான் அறிந்தது" என்று மறுமொழி தருகின்றால், இதற்குமேல் அரசன் விப்ர நாராயணரை விசாரிக் கின்றான். அதற்கு அவர், யான் ஒன்றும் அறியேன்; ஏழையான எனக்கு ஒர் ஏவலாளனும் இல்லை' என்று பதிலிறுக்கின்றார். இங்ங்ணம் இரு தரப்பினர் வாய்மொழி: யையும் கேட்டபின் அரசன் நன்கு ஆலோசித்துக் களவாடிய பொருளை வாங்கியவர் செலுத்த வேண்டிய அபராதப் பொருளைக் கட்டும்படி தேவதேவிக்கு விதிக். கின்றான். அக்காணிக்கையையும் பொன்வட்டிலையும். பெருமாள் சந்நிதிக்குச் சமர்ப்பிக்கின்றான். பொற்கள் வு னுக்கு உரியதண்டனையை ஆராய்ந்து விதிப்பதற்காக விப்ரநாராயணரைச் சிறையிலிடுகின்றான். நாராயணரின் விடுதலை : மீண்டும் ஒருநாள் சீரங்க நாயகி 'விப்ர நாராயணரைத் தேவரீர் தங்கள் திருவிளை யாட்டுக்குப் பொருளாக்காமல் கருணைக்கு இலக்காக்க வேண்டும்" என்று முறையிடுகின்றாள். பெரியபெருமாள் அதனை அங்கீகரிக்கின்றார். அன்றிரவே எம்பெருமான் அரசனின் கனவில் தோன்றி :விலைமாதினிடம் காதல்