பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

ஆழ்வார்களின் ஆரா அமுது


இனி பாண் பெருமாளின் வரலாற்றுக்கு வருவோம். ஒருநாள் பாணர் தம் இசைக் கருவியை மார்பில் தாங்கிய வண்ணம் விரல்களால் தடவித் திருவரங்கன் சந்நிதியை நோக்கி நின்று, அகமும் முகமும் மலர எல்லாச் செல்வங் களையும் ஒருங்கே பெற்றவரைப் போல் பெருமிதங் கொண்டு பாடி நின்றார். அப்போது அவ்வழியாக அரங்கப் பெருமானுக்குத் தீர்த்த கைங்கரியம் செய்யும் லோக சாரங்கர் என்பார் பொற்குடத்தில் திருமஞ்சனம் (நீர்) கொண்டு சென்றார். இவரும் உறையூரில் வாழ்பவர்; நாடோறும் அக்கரையிலுள்ள அரங்கனுக்கு கைங்கரியம் செய்து வருபவர். இவருடைய வித்தையையும் புத்தி யையும் நியம நிட்டைகளையும் அநுட்டான முறை களையும் கண்டவர்கள் இவரை லோகசாரங்க மாமுனிவர்" என்றே வழங்குவதுண்டு. பாணரைக் கண்டதும் இவருக்குச் சினம் பொங்கி எழுந்தது. துறைக்கு அருகிலுள்ள வழியில் நிற்கும் பஞ்சமன் ஒதுங்கிக் கொள்ளவில்லை என்பதே இவருக்குக் கோபம் எழக் காரணம். இவர் பாணரைப் பார்த்து அருவருத்து போ, போ, எட்டச்செல்' என்று பலமுறை கூவினார். பாணர் பக்தி வசப்பட்டு இவ்வுலகத் தொடர்பை மறந்திருக்கின்றார் என்பதுகூட அந்தக் கோப திலையில் அவரால் தெரிந்து கொள்ள முடியவில்லை. உள்ளத்தில் உள்ள வெறுப்பும் பகையுமே வெகுளியாய் வெளிப்படும். அஃது அருளுடைமைக்கு மாறானது. ஆகையால் அதற்கு இடம் இல்லாமல் காத்துக் கொள்வது சிறந்தது. சிலசமயம் வலியார் மேல் சினம் பிறப்பதுண்டு; ஆனால் அது பலிக்காது; வலியாரை அது ஒருசிறிதும் துன்புறுத்த முடியாது. மெலியார் மேல் சினம் பிறந்தால் அஃது அவர்களைத் துன்புறுத்தவல்லது. ஆகையால் சினம் பலிக்காதவிடத்தில் மட்டிலும் சினம் கொள்ளாமல் அடக்கிக் கொள்வது போதாது. இங்குச் சினம் காப்பதும் 7. கிங்கரன்.அடிமையாள்; கிங்கரன் .ெ ச ய் யு ம் தொழில் அடிமைத் தொழில்; அதாவது கைங்கரியம்.