பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன் 159

லீலைகள், பெருமைகள் அனைத்தையும் மிக விரிவாகப் பல பாடல்களிலும் திரும்பத் திரும்பப் பாடி மகிழ்கிறார். கூறியது கூறலாக பல சொற்கள் இருப்பினும் கண்ணனின் நாமங்களை எத்தனை தடவை கூறினாலும் அதில் அலுப்பு ஏது? உயிர் உள்ளவரை சுவாசிப்பதும் உணவு உண்பதும், தண்ணிர் குடிப்பதும், குளிப்பதும், வேலை செய்வதும் எப்படி வாழ்க்கையின் பகுதியாக அமைந்து விட்டதோ அது போல கண்ணன் நாமத்தை ஆயிரமாயிரம் தடவைகள் கூறினாலும் கூட அதை வாழ்க்கையின் பகுதியாகவே ஒன்றிணைந்த பணியாகவே ஆழ்வார் பாடிப்பாடி மகிழ்ந்துள்ளார். கண்ணன் எல்லா விதமான சாகசங்களும், வல்லமையும் பேராற்றலும் கொண்டவன் ஆனாலும் அவன் தனது பக்தர்களின் அன்புக்குக் கட்டுப்பட்டவன் என்பதைத் தெளிவு படுத்தும் வகையில் அசோதை கைகளில் கட்டுப் படுவதையும், பாண்டவர்களின் அன்பிற்கும், பக்திக்கும் கட்டுப்பட்டு, அவர்களுக்குப் போரில் தேரோட்டி அவர்களை வெற்றி பெறச் செய்ததையும், பாஞ்சாலிக்கு மானம் காத்ததையும் ஆழ்வார் குறிப்பிடுகிறார்.

ஆழ்வார் கண்ணனைத் தத்துவப் பொருளாக இப்பேருலகில் உள்ள அனைத்துப் பொருள்களிலும் உள்ள அங்கமாக, வடிவமாக இயக்க சக்தியாகக் காண்கிறார். இக்காட்சியையே. பாரதியிடமும் நாம் காண்கிறோம்.

பொய்கை யாழ்வார்

பொய்கை யாழ்வார் காஞ்சி புரத்தில் ஒரு பொய்கையில் தாமரை மலரில் அவதரித்தவர் என்று ஆழ்வார்களின் வரலாறு சிறப்பாகக் குறிப்பிடுகிறது. இக்கால வழக்கில் கூறுவதானால் அதாவது லோக சம்பிரதாயத்தில் கூறுவதானால் ஒரு தாய் தனக்குப் பிறந்த குழந்தையை பொய்கையில் விட்டுச் சென்றாள் என்று கூறுவதாகும். குந்தி கண்ணனைப் பெற்றுக் கங்கையில் விட்டு