பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன் 275

நெறியில் அறங்கள் வளர்ந்திட வேண்டிக் கொண்டும் உன்னதமான சிந்தனை கொண்டு மகாகவி பாரதி கண்ணனைச் சரணடைகிறார்.

இந்த அருமையான காட்சி நம்மை அடிமைத் தனத்திலிருந்து விடுவித்து முழுவிடுதலை பெறுவதற்கு வழிகாட்டுகிறது. பாரதி

வாழ்க, கண்ணன் வாழ்க!

பாஞ்சாலி சபதத்தில்

மகாகவி பாரதி தனது பாஞ்சாலி சபதம் என்னும் காவியத்தில் கண்ணன் பெருமையை ஆழ்ந்த பக்தி உணர்வுடன், திருத ராட்டிரன் மூலமும் பாஞ்சாலியின் மூலமும் மிகவும் அற்புதமாக வெளிப்படுத்திக் காட்டுகிறார்.

சகுனியும் துரியோதனனும் பாண்டவர்களை சூதுக்கழைக்கத்

திட்டமிடுகின்றனர். திருதராட்டிரன் முதலில் சம்மதிக்கவில்லை. சகுனியும் சுயோதனனும் பாண்டவர்கள் மீது சாட்டிய குற்றச் சாட்டுகளில் ஒன்று இராஜ சூயயாகத்தின்போது கண்ணனுக்கு முதல் அர்க்கியம் கொடுத்தது பற்றியதாகும். அதற்கு பதிலளித்து திருதராட்டிரன் கண்ணனை யாரென்று நினைத்தாய் என்று கேட்டு கண்ணபிரானுடைய பெருமைகளை எடுத்துக் கூறுகிறான்.

"கண்ணனை யேதனக் கொண்டனை அவன்

காலிற் சிறுதுகள் ஒப்பவர் - நிலத்

தெண்ணரு மன்னவர் தம்முளே - பிறர்

யாருமில்லை யெனல் காணுவாய்

“ஆதிபரம் பொருள் நாரணன் - தெளி

வாகிய பாற்கடல் மீதிலே - நல்ல