பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. உலகப் பெருவடிவம்

32


"வன்சரண் சுரர்க்காய்

அசுரர்க்கு வெங்கூற்றமுமாய்

தன் சரண் நிழற்கீழ்

உலகம் வைத்தும் வையாததும்”

எனவும்

“ என்னப்பன் எனக்காயிகுளாய்

என்னைப் பெற்றவளாய்

பொன்னப்பன், மணியப்பன்

முத்தப்பன் என் அப்பனுமாய்”

எனவும்,

" நிழல் வெயில் சிறுமை பெருமை

குறுமை நெடுமையுமாய்

சுழல் வன நிற்பன மற்று

மாய் அவை அல்லனுமாய்”

எனவும், பலவாறாக கண்ணனின் உலகளாவிய அனைத்தளாவிய தன்மையை ஆழ்வார் மிக அற்புதமாகக் கூறுவதை மெய்மறந்து பாடுவதைக் காண்கிறோம்.

உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலையுமெல்லாம் கண்ணன் என்றும் திருக்கோளூர் எம்பிரானைப் பற்றிப்பாடும் போது நம்மாழ்வார் கூறுவதையும் காண்கிறோம்.

" நீராய், நிலனாய், தீயாய்க் காலாய்

நெடுவானாய்,

சீரார் சுடர் களிரண்டாய்ச்

சிவனாய், அயனாய்,