பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமங்கை மன்னன் 181 யனட்பை அவன் பெற்றிருந்தவன் என்பதே குறிப்பிக் கின்றது, மேற்படி கத்வால் சாஸனத்தில், அவ்விக்கிரமாதித் தன் காஞ்சியைக் கைப் பற்றிய செய்தியும் கூறப் படுவ தால், அங்ஙனங் கைப்பற்றியபின் தொண்டை நாடு கடந்து சோழ மண்டலத்துள் அவன் பிரவேசித்தவனா கக் கொள்ளக் கூடாதோ எனின், புதிதாகப் படை, யெடுத்து வந்து சோழ மண்டலத்துள் அவ்வட வரசன் முதலிற் புகுந்த நிலையையே அது குறிப்பிடுவ தால், காஞ்சியை அவன் கைப்பற்றினவன் என்று அது விசேடித்துக் கூறியது, அவன் முன்பு நிகழ்த்திய செயலாக வேனும், அல்லது வெறும்புகழ்ச்சியாக வேனும் கொள்ளத் தக்கது. இவ்வாறன்றேல் காஞ்சி யில் விக்கிரமாதித்தனுக்குத் தோல்வியுற்ற பரமேச் சுரவர்மன், தன்னை வென்ற அவ்வேந்தன் திரும்பிச் சென்று உரகபுரத்தில் தங்கிய சிறிது காலத்துள், பல லக்ஷம் படையுடைய" அவனை முறியடித் தோட்டி னான் என்பது பொருந்தாமை காண்க, இவற்றால், கொங்கு வழியாக வந்த விக்கிர மாதித் தனுக்கு பாண்டியனது பகைமைநேர இடமில்லை யென் பது விளங்கும். அன்றியும், பாண்டியர் பல்லவர்க்கு எதிர்க் கட்சியிற் சேரவே அதிக நியாய முண்டு. சோழரது ஆட்சியைத் தொலைத்துச் சோணாட்டில் தங் கள் ஆதிக்கத்தைப் பல்லவர்கள் சிம்மவிஷ்ணுகால முதலே (உத்' 590) தாபித்து வந்ததோடு, பாண்டி நாட்டின் எல்லைப் புறங்களினும் பிரவேசித்து அர் நாட்டரசர்க்கு இடுக்கண் விளைத்து வரலாயினர். 1. டாக்டர், ஹுல்ஷ்துரையவர்களும் இவ்வாறே கருதினர். (S 1.1. Yol, II,