பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமங்கை மன்னன் 201 'அரனதிகம் உலகளந்த அரியதிகம்' என்ற பிளவுபட்ட கொள்கையினராகாது 'திருமாலுக்கடிமை செய்' என்ற முதுமொழியின்படி ஒழுகிய பெரியோர் என்பது நன்கு பெறப்படும். இனி, திருமங்கைமன்னன், தம் திருவல்லிக்கேணித் திருப்பதிகத்தில், "மன்னுதண் பொழிலும் வாலியு மதிலும் மாடமாளிகையுமண் டபமும் தென்னன் தொண்டையர்கோன் செய்தநன் மயிலைத் திருவல்லிக் கேணிநின் றானை என்று அருளிச் செய்கின்றார். இதனுள், திருவல்லிக் கேணிக்குப் பல திருப்பணிகளுஞ் செய்து அத்தலத்தைச் சிறப்பித்த தொண்டையர் கோனான பல்லவவேந்தனைப் பற்றிக் கூறுதல் காணலாம், அவ்வூர் ஸ்ரீபார்த்தஸாரதி கோயிற் கர்ப்பக்கிருகத்திற் கண்டறியப்பட்ட சிலா சாஸனமொன்று, 780-ல் பட்டம்பெற்ற தந்திவர்மனது 12-ம் ஆட்சி வருஷத்து அமைந்ததாக உள்ளது. இச் சாஸனப் போக்கினின்று, திருவல்லிக்கேணிக் கோயில், தந்திவர்மன் ஆட்சிக்கு முன்பே எல்லாத் திருப்பணிகளும் நிரம்பியிருந்ததாகவே தோற்றக் கூடியது. அதனால், மேற்பாசுரம் கூறுமாறு, வாவி, மதில், மாடமாளிகை, மண்டபம் முதலியன புதியவாக நிருமித் துத் திருவல்லிக்கேணியைச், சிறப்பித்த பல்லவன், அத்தந்தியின் தந்தையும் பரமபாகவதனுமான பல்லவ மல்லனாகக் கருத இடமுண்டு, 1, Ep. Rep. 323-4 of 1903.