பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சடகோபரும் அவர் அருளிச்செயல்களும் 289 சேற்றிற் செந்நெற் கமல மோங்குந் திருக்குரு கூரதனுன் ஆற்றவல்லவன் மாயங்கண்டீர் அஃதறிந்தறிங் தோடுமினே. (4-10-6) என்றும் உபதேசிக்க லாயினர். மேலே கூறியபடி பிரா கிருத லோகத்தவரை வேறுபடுத்திச் சமய பேதங்க ளால் அவர்கள் தம்முள் எதிர் வழக்கிட்டுப் பிளவு படும் படி செய்து வரும் ' ஈசனது மாயமெல்லாம். தன தத்துவ நிலையை அறியாமல் உலகோர் மயங்குமாறு வைத்த உபாயங்களே என்றும், இவ்வுண்மை உணர்ந்து ஆன்மாக்கள் ஒருமிக்கத் தன்னைப் பற்றுவராயின் நித்தியமாகத் தான் திருவிளையாடல் புரிதற்கு வகுத்துக் கொண்ட லீலாலிபூதியான இவ்வுலகம் யாவும் பாழ டைந்து போம் என்ற கருத்தே அவ்வாறு வேறுபடுத் தற்குக் காரணம் என்றும் இவற்றை நன்குணர்ந்து அனைவருமே அவனைச் சரணாகதியாகப் பற்ற விரை யுங்கள் என்றும் ஆழ்வார் உபதேசிக்கும் முறை அருமையும் பெருமையும் வாய்ந்ததன்றோ? இவ்வுப் தேசத்துக் கேற்ப, தம் காலத்தில் அடியார் குழாங்கள் நாடெங்கும் திரண்டு உலகோரை ஆட்கொண்டு வரும் செயல் இவர் கருத்துக்கு ஆக்கமளித்தது. அதனால் குதூகலங்கொண்டு இவர் பொலிக, பொலிக!' என்ற திருப்பதிகத்தில்“கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கினியளகண்டோம் தொண்டீ ரெல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்றார்த்தும் " (5-2-2) என்று பெருங்குரலிட்டு உலகோரை அழைக்கலானார். அருமையாக வாய்த்த இவ்வமையத்திலே யாவருந் திரண்டு சரணாக தியான சத்தியாக்கிரகத்தைப் பக வானிடம் புரிவோராயின் மேற்கூறிய அவனது மாய 19