பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

344 ஆழ்வார்கள் காலநிலை 42. பெரிய திருமொழி 9-5-3ஆம் பாசுரத்தே, “காலையும் மாலையொற்றுண்டு கங்குல் நாழிகை பூழியின் நீண்டுலாவும் என்ற முதலடியுள், ஒற்றுண்டு' என்பது 'ஒத் துண்டு என்று ஓதத்தக்கது. காலையும் மாலையொத்து உண்டு' என்பதற்கு-பாதகவர்க்கம் என்பதை எழுவாயாக வருவித்து. '(அது) காலையிலும் மாலையிற்போலே யிருக்க பாதித்துமுடியாநின்றது" - என்றும், காலை என்பதனையே எழுவாயாக்கி-'காலையும் மாலைபோலே பாதகமாகாநின்றது' என்றும் இரண்டுபொருள்கள் பெரியவாச்சான்பிள்ளை வ்யாக்யானத்திற் காணப்படு கின்றன. இவ்விரண்டு பக்ஷங்களிலும் ஒத்து' என்பதற்குப் போலே' என்ற பொருளைக் குறிப்பிட்டு, உவமத்தின் பொதுத்தன்மை விளங்க ' உண்டு' என்பதற்குப் பாதகமாக உள்ளது' என்று கருத்து விரித்து அப்பெரியார் உரையருளினர். இஃதறியாமல், 'பாதகமாகாநின்றது' என்ற தொடர் வ்யாக்யானத்தில் , உள்ளதைக்கொண்டு, அதற்கு மூலம்வேண்டுமென்று, ஒத்துண்டு என்றிருந்ததை ஒற்றுண்டு' என்று மாற்றிப் பின்புள்ளோர்கொண்டபாடம் ஏற்கத்தக்க தன்றாம், என்னே? காலை மாலை பாதகமாகாநின்றது' என்று, இடையே உவமவுருபு விரியாமலேகூறின், அது குறித்தபொருளை விளக்காமையோடு, ஒற்றுண்டு என்பது, பாதகமாகாநின்றது' என்ற பொருளைச் செவ் வனம், பயவாமையாலும் என்க. எனவே, மாலையை யடுத்து 'ஒத்து' என்ற உவமச்சொல் இருப்பது இன்றி யமையாதது என்பதும், உண்டு என்பது பாதகமாக உள்ளது என்ற பொருள்பட நின்றது என்பதும் அறியத்தக்கன.