பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

65 திருமழிசையாழ்வார் யினும், சோழநாட்டில் அப்பெயரிணைந்த திருமால் திருப்பதிகள் அடியில் வருமாறு ஐந்துள்ளன.--- 1. நந்திபுர விண்ண கரம் நாதன் கோயில்) 2. வைகுந்த விண்ணகரம் இருந்த திருக்கோலம் 3, அரிமேய விண்ண கரம் 4. காழிச் சீராம விண்ண கரம் (சீகாழி) நின்ற திருக்கோலம் 5. திருவிண்ண கர் (உப்பிலியப்பன் சந்நிதி)) இவ்வைந்தனுள் முதல் மூன்றும் இருந்த திருக்கோல முடையனவாதலின், இவற்றுள் ஒன்றையே ஆழ்வார் குறித்தனராகலாம். முற்கூறிய அறிஞர் கருதிய வாறு, தொண்டைநாட்டுத் தலங்களையே மேற்காட் டிய வெண்பாக் குறிப்பிடுவதாகச் சொல்வதற்கில்லை. அத்தலங்களுள் ஒன்றான திருக்கோவலூர், தொண்டை நாட்டதன்றி மலாடு என்ற நடுநாட்டுக்கு உரியதாகும். தெற்குப்பினாகி” என்று கூறப்பட்ட எல்லைப்படி பெண்ணையாற்றின் வடபகுதியே தொண்டை நாடா தலுங்காண்க. இதனால், அந்நாட்டைச் சார்ந்த தலங் களையே பொய்கையார் பாசுரம் குறிப்பிடுவது என்பது பொருந்தாதாம். இவ்வாறே, பூதத்தாழ்வார் தம் திருவர் தாதி 70-ம் பாசுரத்திலும், பேயாழ்வார் தம் திருவந் தாதி 62-ம் பாசுரத்திலும் தொண்டைநாட்டுத் தலங்க ளுடன், சோழபாண்டிநாட்டுத் திருப்பதிகளையும் சேர வைத்துப்பாடுதல் காணலாம். ஆகவே, மேலே குறித்த பொய்கையார் பாசுரத்திற் கண்ட விண்ணகர், இருந்த திருக்கோலமுள்ளனவாகத் தெரியும் சோணாட்டு