பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



     பெண்மைக்கழகு

     பெண்ணுக்கு அழகுநல் தாய்மை - அதைப்
     பெற்றிலளேல் அது நோய்மை,
     பெண்ணேநல் பிள்ளைகள் பெற்று - நின்
     பேரன்பு மார்பிடைப் பற்று.

     செவிலியர் கையில் தராதே - தந்தால்
     சேயும் நன்கு வளராதே;
     குவிந்த மலரிணைப் பின்றேல் - சுடர்
     கொள்ளா விளக்கதுவன்றோ?

     தோழியரிடம்நீ கொடுத்துப் - பிள்ளைத்
     தொல்லை குறைந்ததாய் விடுத்து,
     வாழ நினைத்திடல் வேண்டா - பிள்ளை
     வளர்ச்சியினை அது தூண்டா.

     பிற்காலத்துங்களின் பிள்ளை - பெறும்
     பேறில்லை, வாழ்விலே நொள்ளை;
     சிற்றுண்டிச் சாலையில் உண்டு - நோய்
     சிதைத்திடச் சாவானே மண்டு.

79