49
அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளலாம். அது அவருக்குக் கடமையும் ஆகிறது. அவளுக்கு விருப்பத்துக்கு மாறாக இன்னாரைத்தான் அவள் கட்டிக்கொள்ள வேண்டும் என்று பாரம்பரியமாக நம் நாட்டில் சொல்லி வருவதை இதில் சித்திரித்துக் காட்டுகிறார்கள். இவர் ஏன் அந்த உரிமை எடுத்துக்கொள்ள வேண்டும். இதைச் செய்தால் நல்லது என்று வேண்டுமானால் எடுத்துச் சொல்லலாம். இன்னாரைத்தான் கட்டிக்கொள்ள வேண்டும் என்று எப்படி அவர் வற்புறுத்தலாம், இந்த மாதிரி சம்பவம் மேல் நாட்டில் நடக்குமா? நடப்பதாகக் கதை எழுதிச் சித்திரித்தால் அவர்கள் அந்த அப்பாவைப் பற்றி என்ன நினைப்பார்கள். இப்படிக்கூட அப்பாக்கள் இருப்பார்களா என்று பரிதாபப்படுவார்கள். இதை விவரமாக எழுதியது தேவை இல்லாதது தான்.
மற்றொரு நிகழ்ச்சி இந்த நாட்டுச் சூழ்நிலையைச் சித்திரிப்பது. அவள் தன் காதலனைத் தேடித் தனியே சென்னைக்கு வருகிறாள்; வருகிறவள் விலாசம் கூடவா தெரிந்துகொள்ளாமல் வரவேண்டும். வழி எல்லாம் அவனைப்பற்றிக் கேட்கிறாள். அவன் ஒரு பிரபல பாடகன்; சினிமாப் பாடகன் அப்படி இருந்தும் அவனைப்பற்றி மற்றவர்களுக்குத் தெரியவில்லை. ஒரு வேளை அவன் அப்பொழுதுதான் திரைப்படத்தில் சேர்ந்தவனாக இருப்பான்.
முன்பின் தெரியாத அவள் தனியே சென்னையில் நடக்க முடியவில்லை. முரடர்கள் பின் தொடர்கிறார்கள். கோயிலுக்குள் சென்று உள்ளே அடைக்கலம் அடைகிறாள்; இறைவனும் அவளைக் காப்பாற்றவில்லை என்பது கதை. இயக்குநரின் கருத்தாக இருக்கவேண்டும், அந்த முரடர்கள் அவளைக் கெடுத்தார்களா கெடுப்பதற்கு முன் அவள் தன்னை அழித்துக் கொண்டாளா தெரியவில்லை. அவளுக்குப் பாதுகாப்பு இல்லை; தூக்குப் போட்டுக்கொண்டு