பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இங்கே, நீராமன் தீக்குளிக்கிறான் !

1

சேரி.....

உலகாளும் ஆத்தா அங்காளம்மன் கோவில் திமிலோகப் படுகிறது. ஆடும் பம்பரமாக, ஆடாமல் சுழன்றார் சாம்பான் பூசாரி. மஞ்சள் கொத்துக்கள், ஒரு புறம். மறுபக்கத்திலே, செங்கரும்புக் கட்டுகள். ஈசான்யமுடுக்கில், வாரிப் பின்னப்பட்ட தென்னை ஒலைக் கூந்தல்கள்.

நட்ட நடுவிலே, மாவிலைத் தோரணங்கள் சுருண்டு கிடந்தன.

இதற்கிடையில் -

அந்திசந்தியின் ரம்யமான ஆர்ப்பாட்டம் வேறு. விடிந்தால், சங்கராந்திப் பொங்கல் ஆயிற்றே! அதற்காக

எழில் சேர்த்து ஒயில் சேர்ந்த இந்தப் பொன் அந்தி மாலைப் பொழுதிலே, சேரியிலே மாத்திரம் தைப் பண்டிகை எட்டிப் பார்க்கக் கூடாதென்று சட்டமா, என்ன ? சட்டத்துக்குச் சாதி சம்பிரதாயம் ஏது?

சாம்பான் பூசாரி நயமாகவும் விநயமாகவும் சிரித்துக் கொண்டார். மண்ணில் பிறந்த நாள் முதல் அதுவரை வாழ்ந்த-வாழ்ந்து காண்பித்த வாழ்க்கையின் ஐந்

இ - 1