பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3

மங்கத்தாளுக்கு வாய்முச்சூடும் பல் ஆயிற்று. பொக்கை வாயென்றால், சிரிப்புக்குத் தடை விதிக்க முடியாதுதான்

சாம்பான் சுற்றுமுற்றும் விழிகளை உன்னிப்பாகவே விரித்தார். "பலே! சபாசு ! என்றார். அவருக்கு மட்டிலும் பொக்கை வாயிலே புன்னகைப்பூ மலராதா, என்ன ?

கன்னிப் பொங்கல் திடல் நாணயமான கண்ணியத் தோடு பளிச்சிடுகிறது.

என்ன அதிசயக்கூத்து இது !

அந்திக்கட்டிலேயே, நாலைந்து கன்னிமார்கள் சேரிக் கம்மாயில் குளித்து முழுகிப் பூவும் பொட்டும் மணக்க ஈரப்புடவையும் ரவிக்கையுமாக ராத்திரிப் பூராவிலும் கண்விழித்துக் கன்னி நோன்பு மேற்கொள்ளக்கூடி விட் டனரே ? - செண்பகம், கண்ணாத்தா, பூங்காவனம், செல்லாயி மற்றும் தில்லைக்கண்! - பெயர் வரிசை நீண்டது. ஒவ்வொருத்தியும் பாசமும் நேசமாகவும், அன்பும், பண்புமாகவும் என்னென்ன பிரார்த்திக்கப் போகிறாளோ ? ஒவ்வொருத்தியும் கைப்பிடியாக பற்றி யிருந்த வேப்பிலைக்கொத்து எ ன் ென ன் ன தீர்ப்பை படிக்கப் போகிறதோ ?

சாம்பானின் இடுக்கு விழுந்த கண்கள் தளும்பின 1-'கன்னி நோன்பு இருக்கிற கன்னிக்கழியா பொண்டுங்க மனச்சுத்தத்தோட நாயப்படி நேர்ந்துக்கிட்டா, அவங் களோட வேண்டுதலையை நியாயப்படியே தீர்த்து வைக் கிறதில ஆத்தா அங்காளம்மை ரொம்ப, ரொம்ப கெட்டிக்காரி! உதாரணத்துக்கு அந்நியம் அசலுக்குப் பறிவானேன்! எங்க தங்கம் அது ஆசைப்பட்ட நேச