பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135


‘அப்படின்னா கற்பழிக்கப்பட்ட - அதாவது, அவள் இஷ்டம் இல்லாமலே கெடுக்கப்பட்ட பெண் ஒருத்தி உங்களைச் சரண் அடைஞ்சா, நீங்க அந்த அபலைக்கு வாழ்வு தருவீங்க...இல்லையா?” என்று சவால் விட்டான்

கருணாநிதி,

“தாராளமாக அந்த அபலைக்கு நான் வாழ்வு தருவேன். அந்த மனம் எனக்கு இருக்குது! அதனால்தான் இப்படிச் சூளுரைக்கிறேன் ! ஆனா, உங்க மாதிரி மட்டும் நான் ஒரு போதும் துரோகியாக ஆகிவிட மாட்டேன் !”

முகத்திரையில் செம்மை படரத் தலைப்பட்டது.

“என்ன சொல்lங்க நீங்க, அம்பலத்தரசன் ?”

பயம் கப்பக் கேட்டான் மேல்மட்டத்துப் பிள்ளை யாண்டான். சில்க் ஸ்லாக்கில் வேர்வை கொட்டியது.

‘அதிர்ச்சி அடையாதீங்க. உங்க பாவத்தை நானும் அறிவேன் ! உங்க தொழிற்சாலையிலே அலுவலுக்கு வந்த ஒரு ஏழைக் கன்னியை நீங்க வெறிகொண்டு கற்பழிச்சீங்க, இந்தச் சங்கதி அந்தப் பெண்ணோட அப்பனுக்கு எட்டுச்சு. கெடுத்த நீங்களே அந்தப் பெண்ணை ஏற்றுக்கிடும்படி எவ்வளவோ கதறினான் அந்த ஏழை. பணத்தை வீசி எறிஞ்சீங்க. அவன் அதை உங்க மூஞ்சிலே வீசி எறிஞ் சிட்டுப் போயிட்டான். அன்றைக்கே அப்பனும் மகளும் கடலிலே விழுந்திட்டாங்க. தர்மம் அந்த ஏழைகளைப் பொறுத்தவரை செத்திட்டுது. ஆனா, நீங்க ஜாம் ஜாம்னு இருக்கிங்க உசிரோடு ! உங்க பங்களாசமூகத்தின் வாயை அடைச்சிட்டதாய் நீங்க நினைச்சுக்கிட்டு இருக்கீங்க 1.

ஒண்னு சொல்றேன் கருணாநிதி, தர்மம் சாகாவரம் பெற்றது . அந்த ஏழைப் பெண்ணோட தகப்பனாகவோ அல்லது அவள் சகோதரனாவோ நான் மட்டும் இருந்