பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148


‘தவறுகளை உணர்கிறதுதான், வாழ்க்கையிலே கிடைக்கக் கூடிய மகத்தான ஆறுதலாகும். இந்த வகையிலே உனக்கும் ஒரு பெருமையுண்டு. மிச்சமிருக்கிற வாழ்க்கையை நீ நல்ல விதமாய் வாழ்ந்தால் போதும். நாணயமான உன் வயிற்றுப் பிழைப்புக்கு நான் வழி காட்டுறேன் ! நானும் என் தவற்றை சில மணி நேரத்திலேருந்துதான் புரிஞ்சு உணர்ந்துகிட்டேன் ஊர்வசியைப் பத்தி உன் கிட்டே நான் சொல்லி விட்டேன். அந்த ஊர்வசிதான் என்னோட இந்த மாறுதலுக்கு வித்திட்ட புண்ணியவதி. உன் கிட்டே நான் மன்னிப்பு வாங்கிக்க வேணும், சோதனை இல்லாட்டா, வாழ்க்கையே சுமையற்றுப் போயிடும் போல! நீ திடமாயிரு, அப்பத்தான் எனக்கும் தெம்பாயிருக்கும். தான் அடிக்கடி வந்து உன்னைக் கவனிச்சிடுவேன். போய் வரட்டுமா ?”

ஒளி வெள்ளம் வழிந்தது.

அவள் அன்பின் விழிகளை மலர்த்தி, போயிட்டு வாங்க சார்’ என்று வலது கையை அசைத்தாள்.

வெளுத்துப் போயிருந்த அவளது கவர்ச்சி மிகுந்த முகத்தில் புன்னகைக் கீற்று வெடித்தது ; அவளது குவளைக் கண்கள் நீர்ப்பீலியாயின.

அம்பலத்தரசன் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு புறப்படலானான்.

சந்தடி மிகுந்த தங்கசாலை பின் தங்கியது.

ஒளியும் நிழலும் கலந்த இயற்கையின் செயற்கைக் கோலத்தை ரசித்தவனாக, அடி வைத்து அடிபிரித்து நடந்த அம்பலத்தரசன். ஸ்டான்லியை நெருங்கிய தருணத் தில் ஆஸ்பத்திரிக்குரிய வாடையையும் நெடியையும் அனுபவித்து நடந்தான். அப்போது அவன் பார்வையில் காட்சியொன்று ஏடு விரிந்தது.