பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30


னாலே எனக்கு மெய்ப்பிச்சுக் காட்ட முடியல்லே!’ போன சனிச் சந்தைக் கெடுவிலே நீ நூறாவது வாட்டி குடிச்சுப் புட்டு என்னை நதக்கிப் போட்டே நானும் தொண்ணுரத்து ஒம்பது தரம் பொறுமையா இருந்துப்புட்டு, நூறாவது வாட்டியிலே பத்ரகாளி ஆகி, உன்னை - எனக்கு மஞ்சள் தாலி பூட்டின உன்னைப் பதிலுக்குக் கைநீட்டியும் அடிச் சிப் போட்டுப் பூட்டேன். அப்பவும் ஒனக்கு சூடு சுரனை உறுத்தல்லே!-இப்ப, நொடிக்கு நூறு தடவை நீ, நீ'ன்னு உன்னை, கொண்ட புருசனான உன்னை ஏச்சுப் பேச்சுமா அழைக்கிறதையும், நல்ல பிள்ளை கணக்கிலே கேட்டுக் கிட்டு, ரோசப்படாம குத்துக்கல்லாட்டம் நிற்கிறீயே!நீயெல்லாம் நாளைக்குப் பொழுது விடிஞ்சப்புமே, மறு படியும் வேதாளம் முருங்கைப் போத்திலே மறுபடி ஏறின தாட்டம் மிருகமாக ஆகமாட்டே என்கிறது என்னா நிச் சயம்? நான் உன்னை ரத்துப் பண்ணி ஒதுக்கி வச்சுப் பூட்டு, வேறொருத்தனுக்கு வாழ்க்கைப்படப் போறதாக ஊர் நாட்டிலே கிளம்பின வதந்தியைக் கேட்டுக்கிட்டு அந்த அவமானத்தைத் தாங்கமாட்டாம்ே, இப்ப ஏங் காலடியிலே தண்டம் போட குடுகுடுன்னு ஒடியாந்து, சும்மா கூத்து காட்டி நல்லவன் மாதிரி நடிக்சுப் பாவனை பண்ணுறே! ஆமா, நான் பொய் பேசவே மாட்டேன். ஒன்னை மாதிரி ஆமா!’

தெய்வானைக்குக் கோபவேசம் தூள் மறந்தது; அவள் கண்களிலே ஈரம் கட்டித் தீயை உமிழ்ந்த ஆத்திரம் லவ லேசமும் குறையவில்லையே? மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கவே, சற்றே ஒய்ந்தாள்.

சுடுநீர் சிலிர்த்திட அப்படியே கதிகலங்கி - பொறி கலங்கி நின்ற வேலாயுதம், சிண்டி விடப்பட்ட கட்டு விரியனாகப் பொறுமை இழந்து எழுந்து தலையை நிமிர்த்தியவனாக அவளை - தெய்வானையை - அவன் தாலி கட்டின அழகுப் பதுமை தெய்வானையை