பக்கம்:இசைத்தமிழ்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 1. {} கொண்டது” எனச் சங்கீத ரத்தளுகரம் கூறும். இதற் குரிய அலங்காரமும் வேறு பல குறிப்புக்களும் அந்நூலில் இடம் பெற்றுள்ளன. மேலே சாரங்கதேவர் குறித்த சுத்தமத்யா மூர்ச் சனைக்கு ஒப்பானது கரகரப்பிரியா மேளம். அது ஷட்ஜம், சதுசுருதி ரிஷபம், சாதாரண காந்தாரம், சுத்த மத்திமம்,பஞ்சமம், சதுசுருதி தைவதம், கைசிகி நிஷாதம், என நிற்குமாதலின் இதன் உருவம் ‘ரிகிமபதிந' எனக் கொள்ளலாம். இவ்வரிசையில் ரிஷப தைவதம் இரண்டும் நீங்கியது ஹிந்தோள ராகம். ஆகவே அதன் உருவம் 'கமய ந' ஆகும். இனி. இக்காலத்தில் ஹிந்தோளம் என்ற பெயரில் வடநாட்டில் வழங்கும் இராகம், மேச கல்யாணி மேளத்தில் தோன்றிப் பஞ்சம் ரிஷபமின்றிக் கிமிதிநி என்னும் உருப்பெற்று நிற்பது. இவற்றின் வேருக வேங்கடமகி கூறிய ஹிந்தோள ராகம், நடபைரவி மேளத்தில் தோன்றிப் பஞ்சம ரிஷப மின்றிக் கமதந’ என்னும் உருப்பெற்று நிற்பது. ஹந்தோளம் என்ற பெய ரால் மேலே குறிப்பிட்ட மூன்று இராகங்களிலும் காலத் தால் முற்பட்டது சாரங்கதேவர் கூறும் இந்தோளமே. ஆத லால் சங்கீத ரத்தளுகரம் கூறும் ஹிந்தோள ராகத்தையே தேவாரத்தில் வரும் இந்தளப்பண்ணின் உருவமாகக் கொள்ளுதல் வேண்டும். சாரங்கதேவர் ஹிந்தோளத்திற்கு இலக்கணங் கூறுங்கால் காகலி கலித' எனக் குறித்தா ராயினும், கமபந' என்னும் உருவம் தமிழ் முன்னேர் வகுத்த நூற்ற்மூன்று பண்களுள் வாராமையால் இவ்வி டத்தில் இந்தளப் பண்ணுக்குக் கைசிகிநிஷாதம் கொள் வது இன்றியமையாததாயிற்று எனவும், காகலியந்தரங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/117&oldid=744967" இலிருந்து மீள்விக்கப்பட்டது