பக்கம்:இசைத்தமிழ்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 பதினேரா ந் திருமுறையிலமைந்த கோயில் நான்மணி மாலையிலுள்ள சந்தச் செய்யுட்கள் 15ஆம் நூற்ருண்டில் தோன்றி முருகப் பெருமான இசைத் தமிழாற் பரவிப் போற்றிய அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ்ச் சந்தத்திற்கு ஆதாரமாக அமைந்துள்ளன. பதினேராம் நூற்ருண்டிலே வாழ்ந்த சேக்கிழார் சுவாமிகள் காலத்திலே இசைமரபு அருகியதெனினும் முற் றிலும் மறையவில்லை என்பது அவ்வாசிரியர் பெரிய புரா ணத்துக் கூறும் பழந்தமிழிசை நூற் குறிப்புக்களால் தெளி வாகத் தெரிகின்றது. கி.பி. 983 முதல் 1013 வரை சோழநாட்டை ஆட்சி புரிந்த முதலாம் இராசராச சோழன் தான் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலில் தேவாரத் திருப் பதிகம் பாடுதற்கு நாற்பத்தெண்மரும், உடுக்கை வாசித் தற்கும் கொட்டி மத்தளம் வாசித் தற்கும் இருவருமாக ஐம்பதின்மரை நியமித்தான் என்றும், சோழ மண்டலத்தி லுள்ள தளிச்சேரிப் பெண்களாகிய நடன மாதர் நானுற்று வரும், இசை பாடுகிறவர்களும், ஆடலாசிரியர்களும், இசைக்கருவியாளரும் ஆக ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட மக்களை நியமித்து இசை நாடகங்களை வளர்த்தானென்றும் தஞ்சைப் பெருங்கோயிலிலுள்ள கல்வெட்டுக்களால் அறியலாம். அரும்பதவுரையாசிரியர், அடியார்க்கு நல்லார், நச்சி ஞர்க்கினியர் முதலிய உரையாசிரியர் காலத்திலே பண்டை இசைமரபு ஓரளவிற்கு மறைந்து போயிற்று. குரல், துத்தம், கைக்கிளே, உழை, இளி, விளரி, தாரம் என்னும் ஏழிசைகளையும் ச ரி க ம ப த நி என்னும் எழுத்துக்களாகப் பிறழவுணர்ந்த நிலை பிற்காலத்தில் ஏற்பட்டு விட்டது. 15,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/23&oldid=745074" இலிருந்து மீள்விக்கப்பட்டது