பக்கம்:இசைத்தமிழ்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 பொற்ருளம் ஈந்தருளிய அருள் நிகழ்ச்சியினையும் நம்பியா ரூரராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள், 'நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்த னுக் குல கவர்முன் தாளம் ஈந்து அவன் பாடலுக் கிரங்கும் தன்மையாளனே என்மனக் கருத்தை ஆளும் பூதங்கள் பாட நின்ருடும் அங்கனன்றன எண்கணம் இறைஞ்சுங் கோளிலிப் பெருங் கோயிலு ளானக் கோலக் காவினிற் கண்டுகொண்டேனே' (7-62-8) எனவரும் திருப்பாடலில் உளமுருகிப் போற்றியுள்ளார். தொண்டர்சீர் பரவுவாராகிய சேக்கிழாரடிகள், ‘இன்னிசை யேழும் இசைந்த செழுந் தமிழ் ஈசற்கே, சொன்முறைபாடும் தொழும்பருள்பெற்ற தொடக்கினராய ஞானசம்பந்தப் பிள்ளையாரைப் பண்ணியல் கதியே' எனவும், தேனக்க மலர்க்கொன்றைச் செஞ்சடையார் சீர்தொடுக்குங், கானத் தின் எழுபிறப்பு' எனவும் சிந்தை மகிழ்ந்து போற்றியுள்ளார். இக்குறிப்புக்களைக் கூர்ந்து நோக்குங்கால் ஆளுடைய பிள்ளையார் அருளிய திருப்பதிகங்கள் யாவும் பழைய இசைத் தமிழ்ப் பாடல்களுக்குரிய சிறந்த இலக்கியங்கள் என்பது நன்கு தெளியப்படும். தாண்டக வேந்தராகிய திருநாவுக்கரசர், இயற் றமிழிலும் இசைத் தமிழிலும் வல்லவர்; இசையுருவாகிய இறைவனை நாடோறும் நன்னீரும் நறுமலரும் கொண்டு போற்றும் கடப்பாடுடையராய் ஒழுகியவர்; நாள் வழி பாட்டில் இறைவனது பொருள்சேர் புகழை நினைந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசைத்தமிழ்.pdf/60&oldid=745114" இலிருந்து மீள்விக்கப்பட்டது