பக்கம்:இசையமுது 2, 1952.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திராவிடநாட்டுப் பண் இசை - மோகனம்: வாழ்க வாழ்கவே தாளம் - ஆதி வளமார் எமதுதி ராவிடநாடு வாழ்க வாழ்கவே ! குழும் தென்கடல் ஆடும் குமரி தொடரும் வடபால் அடல்சேர் வங்கம் ஆழும் கடல்கள் கிழக்கு மேற்காம் அறிவும் திறலும் செறிந்தநாடு (வா) பண்டைத்தமிழும் தமிழில் மலர்ந்த பண்ணிகர் தெலுங்கு துளுமலையாளம் கண்டை நிகர்கன் னடமெனும் மொழிகள் கமழக் கலைகள் சிறந்தநாடு (QUT) அள்ளும் சுவைசேர் பாட்டும் கூத்தும் அறிவின் விளைவும் ஆர்ந்திடு நாடு வெள்ளப் புனலும் ஊழித்தீயும் வேகச்சீறும் மறவர்கள் நாடு (வா)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_2,_1952.pdf/7&oldid=1498452" இலிருந்து மீள்விக்கப்பட்டது