பக்கம்:இசையின்பம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(ತJULRS

تو مMAD R

என்னுை

உலகத்தின் தலைசிறந்த கலை இசைக்கலை. தமிழ் என்றைக்குத்தோன்றியதென்று வரையறுத்துக்கூற முடியாது. அப்படியே தமிழிசையுண்டான காலத்தை யும் கணக்கிட்டுக்கூற இயலவில்லை.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்நாட்டில் இகசக்கலை அதி உன்னத நிலையில் இருந்ததென்பதும் எண்ணற்றத் தமிழ்ப் புலவர்களால் பல்வேறு விதத் தமிழ்ப் பண்கள் இயற்றப்பட்டு அவ்வப்போது அரங் கேற்றப்பட்டதென்பதும் பண்டைய நூல்களின் வாய லாக அறியக்கிடக்கின்றது.

அன்றுமுதல் இன்றுவரை அகில மொழிகள் அனைத்திற்கும் ஆதியாய் நின்று, அழகும் இளமை யும் பொலிய அருளாட்சி புரிகின்ருள் தமிழன்னே.

தமிழின்பால், தமிழிசையின்பால் எனக்குள்ள ஆர்வம் காரணமாக அவ்வப்போது இயற்றிய பாடல் களைத் தோகுத்து வெளியிடும்படி இசைப்புலமைமிக்க அன்பர்கள் பலர் வேண்டிக்கொண்டதர்கிணங்கத் தமி முக'த்தின் இரண்டாவது வெளியீடாக இசையின் ப'த்தைத் தமிழகத்திற்களிக்கின்றேன். தமிழகம் யேற் றுக்கொள்ளுமென்றும் நம்புகின்றேன்.

அருந்தமிழ்த் தொண்டாற்றும் அலுவல்கள் பல வற்றிற்கிடையே இந்நூலைச் சரிபார்த்து முகவுரையும் வரைந்தளித்த உயர் திரு. சுத்தான்ந்த பாரதியாரவர் களுக்கு என் நன்றி.

தமிழ் வாழ்க! தமிழிசை வாழ்க!!

புதுக்கோட்டை } கு. சா. கிருஷ்ணமூர்த்தி

1–8–46 'தமிழகம்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையின்பம்.pdf/8&oldid=700891" இலிருந்து மீள்விக்கப்பட்டது