உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இடைத்தரக் கட்டுரை இலக்கணம்.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

மூன்றாம் பதிப்பின் முகவுரை

எந்த மொழியையும் பிழையறப் பேசவும் எழுதவும் அதன் இலக்கணவறிவு இன்றியமையாததென்பது எவரும் மறுக்கொணாதது.

இலக்கணம் பொதுவாய் மாணவர்க்கு வெறுப்பை விளைத்தற்கு, அதன் அரிதுணர் பொருண்மையினும் அதில் அவர்க்கு விருப்பின்மையே பெரிதும் காரணமாகும். மாணவர் மனம் பெரும்பாலும் ஆங்கில மயமாயிருக்கின்ற இக்காலத்தில், ஆங்கிலத்தினும் மிக விரிந்த தமிழிலக்கணம் அவர்க்கு ஏற்கின்றிலது. நன்னூல் மிகையென நீக்கி, அதிற் சில இன்றியமையாத பகுதிகளையே புதுமுறைப் பள்ளியிறுதிப் பாடத்திட்டக் குழுவார் பாட ஏற்படுத்தியிருப்பினும், அவையும் மிகையென மாணவரால் மதிக்கப்படுகின்றன. இலக்கண வறிவின்றிப் பிழையறப் பேசுவதும், எழுதுவதுமோ முயற்கோடும் ஆமை யிறகுமே யாகும். இலக்கண வறிவின்மையானேயே, பல பாடசாலைகளில், ஆறாம் படிவ (Form) மாணவர்கூட ஆறாம் வகுப்பு மாணவர் போன்றே பிழை மலிய எழுதுகின்றனர். அவருடைய கட்டுரைகளை ஆசிரியர் கை வளிக்கவும் மனஞ் சலிக்கவும் ஓயாது திருத்தித் திருத்தி ஒழிவு நேரத்தையெல்லாம் ஒழிப்பினும், அம்மாணவரது அறிவு திருந்தாமையின், அவ்வாசிரியர் உழைப்பெல்லாம் விழலுக் கிறைத்த நீர்போல் வீணாகின்றது

மாணவர் இலக்கண நூல்கள் எல்லாம் கட்டுரைக்கு வேண்டியவும் வேண்டாதனவுமான பல இலக்கணங்களைக் கூறுவன. அவற்றுள் கட்டுரைக்கு மிக வேண்டிய