உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29



அது நம்ம தேசத்துக்கே பெரிய நாசமான காரியமாகும். அவாளவா ஜாதி உசத்திதான்; இதிலே சண்டை எதற்கு, சச்சரவு எதற்கு? எல்லோரும் சகோதராளாகப் பாவிச்சுண்டு. வாழ்ந்தாதான் க்ஷேமம்."

கூர்ந்து கவனித்தால், மேடைப் பேச்சிலேயே, இந்த இருவிதக் குரல் கிளம்பக் காணலாம். முன்னது, உறுதியுடன் உள்ள குரல்—தீமையைத் தீய்த்தாக வேண்டும் என்ற தீர்மானமான குரல்! மற்றது, தட்டுத் தடுமாறி, மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல், ஏனோ தானோவென்றுள்ள குரல்! இந்த இரு விதங்களும், காங்கிரஸ் மேடையில் உண்டு—நெடு நாட்களாகவும்—இன்றும். இந்த இரு வகைப் பேச்சில் பின்னதற்கே, பத்திரிகைகளில் தாராளமாக இடம் கிடைக்கும்! எனவே, மேடைப் பேச்சு மூலம், அதிகமாகப் பரவிய கருத்து இரண்டாவதாக உள்ள 'இரண்டுங் கெட்டான்' கருத்துத் தான் !!

இப்போதும், முதலமைச்சர் பரீட்சை பார்க்கலாம். அவர் வகுப்புவாதம் பேசவேண்டாம், ஜாதிக்கொடுமை ஒழிய வேண்டும் என்று பேசி, நாட்டிலே என்னென்ன வகையான கொடுமைகள் ஜாதியின் பெயரால் நடைபெறுகின்றன என்று விளக்கட்டும்—எத்தனை இதழ்கள் இருட்டடிப்புச் செய்கின்றன என்பதை அனுபவப் பூர்வமாகக் கண்டு கொள்ளலாம்.

வகுப்புவாதி! மிகமிகச் சாமர்த்தியமாக பொதுமக்கள் முன்னிலையில் நடமாட விடப்பட்ட சொல்! தன்னலக்காரரின் அகராதியில் முளைத்த இச்சொல் தமிழகத்திலே, சமூக நீதிக்காகப் பாடுபட, என்றையத்தினம் சிலர் கிளம்பினார்களோ, அன்றுமுதல் உலவிவரும் சொல்!! என்றையத் தினம் ஆதிக்கக்காரரைப் பார்த்து, விழிப்பு நிலை பெற்ற அடிமைகள், இது என்னய்யா அநீதி என்று கேட்கத் தொடங்கினார்களோ, என்றையத்தினம் முதற்கொண்டு, நீதிக்காக வாதாடவும், பிறகு போராடவும் சிலர் முன் வந்தார்களோ, அன்று முதல் இந்தச் சொல் கிளம்பிற்று, தூய்மையான மனமுள்ளவர்களை