பக்கம்:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31



ஆந்தை குயிலைப் பழிக்கிறது என்கின்றனர் ஒரு சாரார்.

பூனை போதகாசிரியர் போல வேடம் போடுகிறது என்கின்றனர் மற்றோர் சாரார்.

இப்படி ஒரே கட்சியிலுள்ள இரு பிரிவுகளுக்குள், ஏற்பட்ட மனபேதம், வகுப்புவாதி என்ற அந்தப்பழைய சொல்லையே ஆயுதமாகக் கொண்ட போருக்கு அடிகோலுவதாகிவிட்டது. இதிலே நியாயம் எந்தப்பக்கம் இருக்கிறது என்பது அல்ல, முக்கியமான பிரச்னை. இந்த வகுப்பு வாதம் என்ற சொல்லுக்குள் இதுவரை அடைத்துவைத்துள்ள குற்றச்சாட்டு, எத்தன்மையது என்பதே முக்கியமான பிரச்னை. இதற்கு இன்றைய அரசியல் நிலைமையை மட்டும் கவனித்தால் போதாது. வகுப்பு வாதம் என்றசொல் பிறந்த காலத்தைக் கவனிக்க வேண்டும்.

தமிழர் நன்கு அறிவர்—ஓயாது பிரச்சாரம் இது பற்றி நடந்திருப்பதால்—வகுப்புவாதி என்ற சொல்லை, காங்கிரசார் பார்ப்பனரல்லாதார் கட்சி ஏற்பட்ட உடனே, சிருஷ்டித்து ஏவினர் என்பதை.

சமூகத்திலே பல ஜாதிகள்—அவைகளுக்கிடையே உயர்வு தாழ்வுகள்—அதன் பலனைச் சிலருக்கு ஆதிக்கம் பலருக்கு அடிமைத்தனம் அந்த ஆதிக்கத்தின் விளைவாகச் சிலருக்குச் சுகவாழ்வு, அடிமைத் தனத்தின் பலனாகப் பலருக்குப் பாதி வாழ்வு! இப்பப்பட்ட நிலையை மாற்றி சமுகநீதி ஏற்படுத்த வேண்டும், என்று சிலர் எண்ணினர்! இந்த எண்ணம் கொண்டது தவறா? சமூகத்தில், மிகப்பெரும்பாலோராகப் பார்ப்பனரல்லாதாரும், சிறுபான்மையினராகப் பார்ப்பனரும் இருப்பதும் பெரும்பாலோர். அந்தச் சிறுபான்மையினரை, சாஸ்திர ஆதாரப்படியும், பழக்க வழக்கத்தின் படியும், மேல் ஜாதியினராகக் கொண்டிருப்பதும், இந்த நிலைமையினால் பெரும்பாலோர், கல்வி, தொழில், பொருளியல், அரசியல், மத இயல், முதலியவற்றில் உரிய அளவு இடமோ, வசதியோ பெறாமல் இருந்தும்