35
பனத் துவேஷி, வேதநிந்தகன், சாஸ்திர விரோதி, ஆரியவைரி, நாத்தீகன் என்று சரமாரி தூஷணைகள் நமது இயக்கத்தவரைத் துரத்திக்கொண்டு வந்தன. தூற்றும் சொக்கலிங்கங்களும் என்றேனும் ஓர் நாள், இதே கருத்துக்கு வந்துசேருவார் என்ற நம்பிக்கை ஒன்றுதான் நமது இயக்கத்தவரை இவ்வளவு நிந்தனைகளையும் ஏற்றுக்கொள்ளச்செய்தது. அந்த நம்பிக்கையும் வீண் போகவில்லை. நாம் இன்று வரை நீதிக்காக உரிமைக்காகப்போரிடும் எங்களை அழித்தாலும் சரி, கடைசி மூச்சு இருக்கும் வரை உரிமைக்குப் போராடுவோம் என்று மட்டுமே கூறிவந்தோம், நெடுநாட்களுக்குப் பிறகு நாம் வகுத்தவழி நடக்கும் நண்பர் தினசரியார் "மைனாரிடிகள் மெஜாரிட்டிகளை ஆளமுயற்சிக்கும் போதுதான் தகறாருகிளம்புகிறது. லீகர்கள் மைனாரிட்டியாய் இருந்து மெஜாரிட்டியை ஆளமுயற்சித்ததால்தான் இந்தியாவில் அமளி ஏற்பட்டது, அதே தவறை வேறு யாரும் செய்யாமல் ஜாக்கிரதையாய் இருக்கவேண்டும்" என்று தீர்மானமாக எழுதியிருக்கிறது! அமளி குமளி! ஜாக்கிரதை!—நாம் உபயோகிக்கமறுக்கும் சொற்கள்——தினசரியிடமிருந்து கிளம்புகின்றன! “இருக்கிற ஏகபோக உரிமையைக் காப்பாற்றிக்கொள்ள தேசியம் பேசுவது ராஜிய நாணயமல்ல." என்றும் எழுதியிருக்கிறது. 1940-ல் நமது இயக்க ஏடு, விடுதலை டிசம்பர் 9-ந்தேதி இந்த வகுப்புவாதப் பிரச்னையைப்பற்றி பார்ப்பனர் விஷயமாக நாம் கொண்டுள்ள கருத்தைக் கூர விரும்புகிறோம். பார்ப்பனத் துவேஷி என்று கூறப்படும் நாம், பலவிதமான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளோம். வகுப்புத் துவேஷ விஷயத்தை நாம் மக்களிடை ஊட்டுகிறோம் என்றும், வீணான வகுப்பு வித்தியாசங்களைக் கூறி நாட்டிலே பிளவை, பேதத்தை, மாச்சரியத்தை, கலகத்தை உண்டாக்குகிறோம் என்றும், இங்ஙனம் நாம் செய்வதற்குக் காரணம் நமக்குப் பட்டம் பதவிமீதுள்ள ஆசை என்றும் பலப்பல கூறுகின்றனர். பட்டமும், பதவியும் காங்கிரசில் சேர்ந்தால், பாடு படாமல், தொல்லைக்கு ஆளாகாமல், தொந்திரவை மேற்போட்டுக் கொள்ளாமல், பெற முடியும் என்பது நமக்கும் நம்மைத் தூற்றும் தோழர்களுக்கும் தெரியும். இருந்தும் பதவியைச் சுலபத்திலே பெறக்—