40
சென்னை உயர்நீதி மன்றம்
1949-ம் ஆண்டு நவம்பர் திங்கள் 4-ம் நாள் வெள்ளிக் கிழமை.
- கனம் திரு. பக்கால வெங்கட ராஜமன்னார் பிரதம நீதிபதி.
- கனம் திரு. நீதிபதி பஞ்சாபகேச சாஸ்திரி.
- கனம் திரு. நீதிபதி சந்திரா ரெட்டி.
ஓ, பி. நீ, 283–(1949)
1931-ம் வருடத்திய இந்தியப் பத்திரிகைகள். (அவசரச்) சட்டத்தின் 23-வது பிரிவின்படிக்கு.
காஞ்சீபுரத்திலிருந்து வெளிவரும் தமிழ் வார வெளியீடாகிய "திராவிட நாடு" பற்றி.
மனுதாரர்
பிரதிவாதி
சி.என். அண்ணாதுரை
மனுதாரர்
நீதி மன்றம் அளித்த தீர்ப்பின் விவரம்:-
1949-ம் வருடத்திய ஒ. பி. நீ. 293.
மனுதாரர் காஞ்சீபுரத்தில் அச்சாசி வெளியிடப்பெறும் "திராவிடநாடு" தமிழ்வார வெளியீட்டின் ஆசிரியரும் வெளியீட்டாளருமாவார். செங்கற்பட்டு மாவட்ட நீதிபதியிடம் 1949 ஜூ-ன் 25-ந் தேதிக்குள்ளாக ரூ. 3000 ஜாமீன் தொகை கட்டியாக வேண்டுமென்று தனக்கு மாகாண சர்க்கார் 25-5-1949-ந் தேதியிட்டுப் பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டு மென்பது மனுதாரரின் தாவாவாகும். மனுதாரரின் 4-4-48 18-4-48 தேதியிட்ட இதழ்களில் 1981-ம் வருடத்திய இந்தியப் பத்திரிகைகள் (அவசரச்) சட்டத்தின் 4-வது பிரிவைச் சேர்ந்த (1)-வது உட்பிரிவின் கீழ்வரும் (யெச்) சிறு பிரிவின் கீழ் விவரிக்கப்படுவதை யொத்த தன்மை வாய்ந்த விஷயங்கள்