பக்கம்:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50



வாய்ப்பு இருக்கவே செய்கிறது. இத்தகைய சந்தர்ப்பங்களில், குறிப்பிட்ட வகுப்பு அல்லது ஜாதியொன்றின் துயரங்களை எடுத்துக்கூறும் கட்டுரையை ௸ சட்ட எல்லைக்குள் கொண்டு வருவது தவறாகும்.

சிறு பான்மை வகுப்பொன்று பெருவாரி மக்கள் கூட்டமொன்றை அடிமைப்படுத்தி ஆதிக்கஞ் செலுத்த துணைபுரிவதாகக் கட்டுரையாளரால் கருதப்படும் அம்முறையானது மிகமிக வன்மையாகத் தாக்கப்பட்டுள்ளது கட்டுரையில் என்று நாம் கொண்டாலுங்கூட, சிறுபான்மை வகுப்பினராகிய பிராமணர்மீது நாம் தாக்குதல் எதுவும் காணவில்லை. எவர்மீதும் வெறுப்பையோ அதிருப்தியையோ தூண்டி விடக் கூடியதான சொற்களெதுவும் இருப்பதாக எங்களுக்குத் தோன்றவில்லை. இதுபோன்ற வழக்கு 4-வது விளக்கத்தின் கீழ் வருமென்பதே எங்கள் கருத்து, பிராமணர்கள் உபாதையுறும் வகையில் பிராமணரல்லாதவரை அவர்கள் மீது ஏவி விடுவதான எந்தத்தன்மையும் கட்டுரையில் இல்லையென்பதை அட்வகேட் ஜெனரலே ஏற்றுக்கொண்டுள்ளார்.

பகைமை, வெறுப்பு என்பவை கடுமையான சொற்களாகும். மாறுபட்ட அபிப்பிராயங்கள் நிலவி வரும் உலகில், அதிருப்தியைத் தெரிவித்துக் கொள்வதும் துயரங்களை எடுத்துக் கூறுவதும் பகைமையையும் வெறுப்பையும் வளர்க்கக்கூடியவைகளாகுமென்று கூறுவது நியாயமற்றதாகும். ஒரு வகுப்பு மக்களிடையே ஒற்றுமை நிலவுவதற்கென காரண காரியங்களை எடுத்துக்கூறி ஆவன செய்வது பல திறப்பட்ட வகுப்பாரிடையே வெறுப்பையும், பகைமையையும் வளர்ப்பதாகாது. கட்டுரையில் ஆங்காங்கு சிற்சில சொற்றொடர்களும் சொற்கோவைகளும் சிறிது வேகமாகவே இருக்கின்றனவென்பது உண்மையே. "பார்ப்பனியம்" என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருப்பது நல்லதல்லதான். ஆனால், பத்திரிகைச் சட்டத்தின் பாதுகாப்பு விதிகள் தண்டனை விதிப்பது பற்றி பேசக்கூடியனவாய் இருப்பதால், ஐயப்பாடு நேரிடுவதை யனுசரித்து அளிக்கக்கூடிய சலுகையை (அப்படி எதுவுமிருப்பின்) யார்