உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதயகீதம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலிநிகர் மாந்தர் 9 எல்லாரும் தமிழகத்தின் பொருள்களைப் பெற்று வாணி பம் நடாத்தினர் ! வீரமும் விவேகமும் கலக்கத் தரணி யாண்ட மன்னாதி மன்னர்கள் வீழ்ந்தனர்-வீரம் சோரம் போயிற்று ! சரித்திரச் சக்கரம் சமர்கண்டு குதித்த வெஞ்செயல் வீரர்களைச் சரணாகதிக்காளாக்கிற்று எண்ணத்தைச் சூறையாடும் சூதுக் கொள்கைகள், தமிழர் தோட்டத்துக்குள் சதிராடத் துவங்கிவிட்டன. சரீரம் வேதம் ; உயர்நிலை உபநிஷத்; இராமயணமும் மகாபாரதமும் இரண்டு சுவாசப்பைகள். அதன் இருதயம் மனுஸ்மிருதி. புராணங்கள் கதைகள் முதலியன அச்சரீரத்தின் எலும்புக்கூடு, ஆகமங்கள், சாஸ்திரங்கள், மந்திரங்கள், சடங்குகள் முதலியன அந்தச் சரீரத்தின் நரம்புகள், மதங்கள் கொழுப்பு ஜாதி என்பது தோல் " என்று வை. சூரிய நாராயண சாஸ்திரியார், என்னும் சரித்திராசிரியர் எழுது கிறார் - இங்கு ' வந்தோரின்' நிலை குறித்தும், அவர்களது வாழ்க்கை வகை குறித்தும் கூறும்பொழுது அவர் குறிப்பிடும் சரீரம் தென்னாட்டுக்குள் நுழைந்தது தேவ பாஷை பிறந்தது! • தேவர் மனிதர், உயர்வு - தாழ்வு உருவாயிற்று! தமிழ் மகன் தாழ்ந்தான்- தமிழ்நாடு தாழ்ந்தது-தமிழன் கெட்டான்! புதுக்கலாச்சாரம், புதுமொழி, புதுப்போதனைகள் புகுந்தன. வீரமும் வெற்றிச் சிந்தும் பாடிக்கிடந்த பரம்பரையினர், விதி என்னும் சதிக்கு ஆளாயினர். 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதயகீதம்.pdf/16&oldid=1740313" இலிருந்து மீள்விக்கப்பட்டது