புலிநிகர் மாந்தர் 17 யாவும் வீரனை கோழையாக்கிற்றே ஒழிய, வெஞ்சமர் காளையாக்கவில்லை ! பக்திப்போதையைத்தரும் இசையாவும், மூட நம்பிக் கையைப் பரப்பும் இயலாகவும், வைதீக வியாக்கியானம் தரும் கூத்தாகவும், 'முத்தமிழ்' சிதைந்தது சின்னா பின்னமாகியது. தமிழ்ச் சோலையில், தகாக் கருத்துக்க ளெனும் தருக்கள் முளைத்தன, மரமாக வளர்ந்தன ! இந்நிலை வெகு வேகமாக வளர, வளங் கெட்டுப் போன் மூவேந்தரின் வீழ்ச்சியும் காரணமாயிற்று அந்நியப் படையெடுப்புகள், வெளிநாட்டான் பிரவேசம், இன்னும் தீமைகளைத் திரட்டிவந்தது. காரிக்கண்ணனாரும், நெடுஞ்செழியனும், கடும். பெருங்கோவும், செங்குட்டுவனும், இளநாகனாரும், காவற் பெண்டும், வெள்ளைப்பாடினியும் உலவிய தென் னாட்டில், ஆறுமுகனும், சுப்பிரமணியனும், கோவிந்த னும், நாராயணசாமியும், ரங்கநாதனும், ஜகதாம்பாளும், நீலாயதாக்ஷியும் உலவலாயினர்! மக்களின் பெயர்கள், ஊர்களின் பெயர்கள் மாறின. அந்த அளவுக்குத் தாய் மொழியின் நிலை கெட்டது. நெஞ்சு துடிக்கும் வகைக்காளானது! ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு காலத்தில் மறு பல மாற்றங்கள் நிகழ்ந்திருக் மலர்ச்சி பூத்திருக்கிறது. கின்றன, மொழியிலும், வாழ்கை வழியிலும், சம்பிர தாயங்களிலும், பழக்க வழக்கங்களிலும். பழைமை
பக்கம்:இதயகீதம்.pdf/18
Appearance