உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதயகீதம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புது அரசியல் 27 தினம்; நமது நாட்டுக்கு தீமையும் தீதும் பயக்கக்கூடிய தேதி! புதிய அரசியலமைப்பு மூலம், புதுச் சட்டதிட்டங் கள், புது ஏற்பாடுகள் இம்மாபெரும் துணைக்கண் டத்தை, ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாடுகள் என்று கூறத்தக்க அளவு பரந்து விரிந்து கிடக்கும் ஒன்பது மாகாணங்களை, முப்பதுகோடி மக்களை ஆளத் துவங்கி விட்டன. துணைக்கண்டம் - என்று அழைக்கப்படும் இம் மாபெரும் பூபாகம் ஒரே ஆட்சி நிர்வாகத்துக்கு உள்ளாக் கப்பட்டுவிட்டது, ஒரே நாடு, என்ற போலிப் பூவேலை, பெருமை முலாம் பூசப்பட்டு. எண்ணம், வாழ்க்கைமுறை, மொழி, பண்பாடு, பழக்க வழக்கம், கலாச்சாரம் ஆகிய துறைகளில் பல் வேறு வகையினர் வாழும் இப்பரந்த உபகண்டம், குடி யரசு, என்று கூறப்பட்டு, தலைவர் என்ற ஒரு நபரின் ஆட்சிக்குரிய நாடு என அறிவிக்கப்பட்டுவிட்டது, அதற் கான சட்டதிட்டங்கள் தரும் அரசியலமைப்பு ஒன்றை ஆக்கிக்கொண்டு. அதன்படி பிரகடனம் செய்யப்பட்டு விட்டது. ஹர்ஷன், கனிஷ்கர், அக்பர், அசோகர், சந்திர குப்தர், அவுரங்கசீப், ஆகிய மன்னாதி மன்னர்கள் காலத் திலும், எட்டிப் பிடிக்க முடியாததாக இருந்த, நம் நாடு டெல்லி மகுடத்திற்கு என்றும் அடிபணியும் நிலை உண்டாக்கப்பட்டு விட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதயகீதம்.pdf/34&oldid=1740331" இலிருந்து மீள்விக்கப்பட்டது