32 இதய கீதம் நேர்மை என்கிற பாதை, கடமை என்கிற விளக்கு, அமைதி என்கிற ஊன்றுக்கோல்கொண்டு இருட்டு மயமாக்கப்பட்டிருக்கும் நமது இலட்சியப் புரியை நோக்கி, நாம் எப்போதும் போல இன்னும் வேகமாக முன்னேறியே செல்வோம். யார் தடுத்தாலும், எவர் முட்டுக்கட்டை யிட்டாலும், நமது பயணத்தைத் தடுத்து விடமுடியாது. முன்பு-பல ஆண்டுகளுக்கு முன்னர்- வங்கத்தைத் துண்டாக்கிற்று இரண்டாக, பிரிட்டிஷ் ஆதிபத்தியம் அதுகண்டு, வங்கத்தார், குமுறினர் எதிர்ப்பியக்கம் நடத் தினர் அடாது, இது' என்றனர் ஆகா! ஒற்றுமை யைச் சீர்குலைப்பதா” என்று ஓங்காரக் கூச்சல் எழுப் பினர்- வெள்ளை ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சி என்று கூறினர்! ஆர்ப்பரிப்பு, கொதிப்பு, ஆத்திரக் கூச்சல்கண்ட ஆங்கில ஆட்சி அப்போது, மார்தட்டித்தான் பேசிற்று. சட்டம் செய்துவிட்டோம், அதை மீண்டும் ரத்துசெய்வ தென்பது எங்கள் அகராதியில் இல்லை, இட்டது இட் டதுதான் என்று கர்வத்துடன் பதில் தந்தனர்! ஆனால் கர்வம் நீடிக்கவில்லை-மக்கள் எதிர்ப்பு மண்டியிடச் செய்தது. சட்டத்தை மீண்டும் மாற்றும் படிச் செய்தது. துண்டுபோடப்பட்ட வங்கம் ஒரே வங்கமாக ஆக்கப்பட்டு. 26 "ஆகஸ்டு 15 " வரை, ஒரே மாகாணமாக இருந்து, பின் பாகிஸ்தானுக்குப் பாதியும், இந்துஸ்தானுக்கு பதி யும் என்று ஆயிற்று!
பக்கம்:இதயகீதம்.pdf/39
Appearance