பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றத்துக்கும், அவரது சுறுசுறுப்பும் ஆண்மையும் மிக்க முகத்துக்கும் அன்னியமாகத் தோற்றியது. திடீரென்று அவர் மெளனமானார்; அவரது முகம் உடனே மாறியது : அவரது கரிய, வெயிலால் காய்ந்து வாடிய கன்னங்கள் வெளிறின; அவரது விறைப்பான தோலின் கீழ் தாடைத் தசை கள் மேலும் கீழும் அசையும் விதத்தில் அவர் பற்களை அத்தனை பலமாக இறுகக் கடித்தார்; அவரது கண்கள் அத்தனை . தணிக்க முடியாத, மூர்க்கமான பகைமையுணர்ச்சியோடும் முன்னோக்கி நிலைகுத்தி வெறித்து நோக்கின. என்னையும் அறியாமல் அவரது பார்வை சென்ற திக்கை நானும் பார்த்தேன். அங்கு மங்கிய, அநேகமாக நிறத்தையே இழந்து விட்ட சட்டையையும், தமது தலைக்குப் பின்னால் தள்ளி வைக்கப்பட்ட பக்கவாட்டுத் தொப்பியையும் தரித்த ஒரு போர்வீரரின் காவலின் கீழ், எங்களது தற்காப்பு முன்னணி நிலையின் திசை யிலிருந்து மூன்று ஜெர்மன் கைதிகள் வருவதைக் கண்டேன். நமது போர்வீரர் மெதுவாக நடந்து வந்தார். அவர் தமது கையிலிருந்த துப்பாக்கியைத் தமது அளந்து நடக்கும் தடைல் கேற்பத் தாளம் தவறாமல் வீசியசைத்து வந்தார்; அந்தத் துப்பாக்கிச் சனியன் சூரிய ஒளியில் பளபளத்தது. மஞ்சள்நிறச் சேற்றுக்கறை படிந்த குட்டைப் பூட்சுகளைத் தரித்த தமது பின்னும் பாதங்களை வேண்டா வெறுப்பாக நகர்த்தி, அந்தக் கைதிகள் மிகவும் மெதுவா க நடந்து வந்தனர். நிலவறையின் மட்டத்துக்கு நேராக வந்ததும், அந்த வரிசையின் முன்னால் வந்த கைதி--தடித்த பழுப்புநிறக் குத்து மயிர் மண்டியிருந்த குழிந்த கன்னங்களைக் கொண்ட மத்திம வயதான அந்த ஜெர்மானியன்-எங்கள்மீது ஓநாயின் பார்வையோடு தனது ஈரக்கண்ணைப் பாய்ச்சினான்; பின்னர் தனது பெல்ட் வாருடன் கட்டப்பட்டிருந்த தலைக்கவசத்தைச் சரி செய்வதற்காகத் திரும்பிக் கொண்டான். இதனைக் கண்டதும் லெப்டினென்ட் கெராசிமோவ் துள்ளியெழுந்தார். காவலாக வந்த போர்வீரரை நோக்கி, எரிந்து விழும் கீச்சுக் குரலில் இவ்வாறு கத்தினார்:

  • நீ இவர்களோடு சாவகாசமாக உலாவப் போய்க் :-

கொண்டிருக்கிறாயா, என்ன? சீக்கிரம் ந... போ முன்னே . சொன்னது காதில் விழுந்ததா? அவர் மேலும் பேச விரும்பினார் என்று தெரிந்தது; என்றாலும் கோபாவேசம் அவரது தொண்டையை அடைத்தது: அவர் தமது குதியங் காலைச் சட்டென்று வீசித் திருப்பி, நிலவறையின் !.டிகளின் வழியே இறங்கி ஓடினார். அவர்

ஜெர்ம?” னங்களை பழுப்புநி.

105