பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்டிக்கப்படுகிறோம்; நாம் தோல்வியைச் சந்திக்கும்போது ஆதரவு காட்டப்படுகிறோம்; நாம் பாராட்டுக்குத் தகுதியாகும் போது பாராட்டப்படுகிறோம்; நம்மில் ஒவ்வொருவரும் மக்களின் வழிகாட்டும் அன்பு கனிந்த கரத்தை எப்போதும் கண்டுணர்ந்தே வருகிறோம். எனவே மக்கள் எழுத்தாளரை நோக்கி அவர் மிகவும் குறைவாகவே எழுதுகிறார் என்றோ, அல்லது அவரது எழுத்துக்கள் தரத்தில் தாழ்ந்தவையாக உள்ளன என்றோ, கூறும்போது, அந்த எழுத்தாளர் தம்மைத் தற்காத்துக் கொள்வதற்காக என்ன கூற முடியும்? அவர் வெறுமனே இனிமேல் தாம் நன்றாக எழுத முயல்வதாகத் தெளிவற்று வாய்க்குள் முணு முணுத்துக் கொண்டு, முகத்தில் அசடு வழியத்தான் நிற்பார். சில சமயம் அவர் சொன்னவாறே செய்கிறார்; ஆனால் எப்போதுமே அல்ல, அவர் ஒரு சிறந்த புத்தகத்தை கே. எழுத விரும்புவார்; என்றாலும் அவர் எவ்வளவு தான் முயன்று பார்த்தாலும், அவரால் அவ்வாறு எழுதலே முடிவதில்லை. அதற்கு என்ன தேவையோ, அது அவரிடம். இருப்பதில்லை. அவரிடம் திறனம் குடியோடிப் போய்விட்டது. ,

  • இந்தப் பிரச்சினைக்கு இன்னொரு பக்கமும் உள்ளது. அதனைக்

குறித்து நாம் உரக்கவும் தெளிவாகவும் பேச வேண்டியுள்ளது - அது தான் காகிதம் பற்றிய பிரச்சினை. கதைப் புத்தகங்களுக்காக ஒதுக்கப்படும் காகிதத்தின் சதவீதம் மிக மிக, மிக மிகக் குறைவு: அது கையைக் கட்டிக்கிற அளவுக்கு அவ்வளவு குறைவு , கோஸ் வித்திஸ்தாத் ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர்கள், விருது பெற்ற ஒவ்வொரு நூலாசிரியரின்.--அத்தகைய விருது பெற்ற ஆசிரியர்களே 17 2 பேர் உள்ளனர்-ஒரே ஒரு புத்தகத்தைத் தாங்கள் இந்த ஆண்டில் வெளியிடுவது என்றாலும்கூட, அவர் களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள காகிதத்தில் எதுவும் மிஞ்சாது என்று கூறுகின்றனர்; ஆயினும் என்ன தான் இருந்தாலும், ஏற்கெனவே விருது பெற்றுள்ள' ஆசிரியர்களின் நூல்களை மட்டுமே வெளி பிட்டாக வேண்டும் என்பதில்லை; வருங்காலத்தில் விருதுகளைப் பெறவிருக்கும் எழுத்தாளர்களின் நூல்களையும் வெளியிடத்தான் வேண்டும். மேலும், இன்னொரு வகையான எழுத்தாளர்களும் இருக்கிறார் கள். அதாவது முன்னைப் பழங்காலத்தில் தமது மேதத்துவத்துக்குப் பிரதிபலனாக, சைபீரியாவில் . கடின உழைப்புத் தண்டனையையும் நாடு கடத்தலையுமே பரிசாகப் பெற்றவர்களே அவர்கள்; அவர்கள் கட்டி வைக்கப்பட்டுக் கசையடித் தண்டனை பெற்றனர்; ராணுவத்தில் சாதாரணச்

சிப்பாய்களாகப் பலகப் ந்த மாகச் சேர்க்கப்பட்டனர்; அரசாங்க.

246