பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர் திரும்பி வந்தால், அது நம் அனைவருக்குமே ஓர் அற்புத மான பரிசாக விளங்கும். நாடுகளிலெல்போம் மிகப் பரந்ததான நமது நாட்டில் எங்கேனும் சென்று குடியேற முடிவு செய்யும் எழுத்தாளர்கள் அனைவருக்கும் சரியான முறையில் உதவியாக வேண்டும்; ஏனெனில் தாராளமாகச் செலவு செய்வதற்கு எல்லா எழுத் தாளர்களிடமும் ஏராளமாகப் பணம் இருக்கிறது என்பது ஓர் அசட்டுத்தனமான கட்டுக்கதையே தவிர வேறல்ல. தோழர்களே, இங்கு நான் இதனை உங்களிடம் கூறிக் கொண்டிருக்கும் இதே நேரத்தில், என் இதயம் மட்டும் சரியாக இல்லை: அதோ இரும்பு மனிதரான் நமது நிதியமைச்சர் தோழர் ஜிவெரேவ் என து அதீத மான திட்டங்களைக் கேட்டுக் கொண்டு அமர்ந்திருக்கிறார்; அவர் ஏற்கெனவே என்னைத் தமது வர்க்க எதிரியாகக் கருதத் தொடங்கிவிட்டார் என்று நான் நிச்சயமாகக் கூறுவேன். அவரது மனத்தில் அமைதி நிலவ நான் என்ன கூற முடியும்? முதலாவதாக எனது திட்டம் நனவாவதற்கு முன்னால், எத்தனையோ 'ஆனால்' களுக்கும், ' அப்போதுதான் ' களுக்கும் தீர்வு கண்டாக வேண்டும். இரண்டாவதாக, மறு குடியேற்றம் செய்யும் எழுத்தாளர்களில் மூவரில் ஒருவர் மட்டுமே ஒரு நல்ல, மிகவும் அவசியமான புத்தகத்தை எழுதி முடிப்பாராயினும் கூட, அது இந்தத் திட்டத்தைப் பெருமளவுக்கு நியாயப்படுத்தி விடும். மேலும், அன்பார்ந்த தோழர் ஜிவெரேவ அமைதிப்படுவதற்காக நான் இங்கேயே இப்போதே மனப்பூர்வமாக ஒரு சபதமும் செய்து கொள்கிறேன். கூட்டுப் பண்ணை விவசாயி க ளுக்குச் சொந்தமான பழ மரங்கள் பற்றிய விஷயம் குறித்து, நான் உயிரோடுள்ளவரை, என்றுமே பிராதாவுக்கு மீண்டும் எழுத மாட்டேன், என்ன தான் இருந்தாலும், அதற்கும் எனது தொழிலுக்கும் என்ன சம்பந்தம்? இந்த விஷயத்தில் என்னைக் காட்டிலும் தோழர் ஜி வெரேவே மிகவும் நிபுணத்துவம் வாய்ந்த விஷய ஞானத்தைப் பெற்றிருப்பவர். விவசாயிகள் தமது பழ மரங்களை எப்போது வெட்டித் தள்ள வேண்டும், எப்போது புதிய கன்றுகளை நட வேண்டும் என்பதை அவர் நன்கறிவார். எனவே இதனை நான் அவருக்கே விட்டு விடுகிறேன், நமது இடத்தைக் காலக் கிரமத்தில் நிரப்பவிருக்கும் இளம் எழுத்தாளர்களின் பால், உங்களது விசேடமான கவனத்தைத் திருப்ப நான் விரும்புகிறேன். மூத்த தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர்களைப் பற்றியும், அவர்களிற் சிலர் தமது சுற்றுச் சூழலை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் பற்றியும் நான்

33

303