பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தீர்க்கவும் முனையும் ஒரு முயற்சிக்குரிய அத்தனை கோரத்தோடும்" யுத்தம் எங்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் புகுந்துள்ளது . . போர்முனையில் நிகழ்ந்து வருபவை யாவும், ஒரு முழுமையான போரில் நிகழ்பவை யாவும், எங்கள் அனைவரது வாழ்க்கையிலும் ஓர் அழிக்க முடியாத முத்திரையை ஏற்கெனவே பதித்துள்ளது. நான் எனது தாயை இழந்து விட்டேன்; எந்தவிதமான போர்க் கேந்திர முக்கியத்துவமும் இல்லாத எங்களது கிராமத்தின் மீது தொடுக்கப்பட்ட விமானத் தாக்குதலின்போது . ஓரு ஜெர்மன் விமானம் வீசிய குண்டினால் அவள் கொல்லப்பட்டு - விட்டாள். இந்த நடவடிக்கை கொள்ளைகாரக் கும்பல்களுக்கே பொருத்தமான ஒரு நோக்கத்தையே கொண்டிருந்தது, அதாவது ஜெர்மன் ராணுவம் முன்னேறி வரும் நிலையில், மக்கள் தமது கன்று காவிகளைக் கிழக்கு நோக்கி ஓட்டிச் செல்ல முடியாதவாறு , தடுக்கும் விதத்தில், அவர்களைச் சிதறடிப்பதுதான் அந்த நோக்கமாகும். ஜெர்மன் குண்டுகள் எனது வீட்டையும் எனது நூலகத்தையும் நாசமாக்கியுள்ளன, நான் எழுத்தாளர்களும் : ஈக கிராமவாசிகளுமான பல நண்பர்களை ஏற்கனவே இழந்து , விட்டேன்; அவர்கள் போர்முனையில் கொல்லப்பட்டனர். நெடுங்காலமாக நான் எனது குடும்பத்தோடு தொடர்பு இல்லாமலே இருந்து வந்தேன். இந்தச் சமயத்தில் என் மகனும் நோய்வாய்ப் பட்டிருந்தான். அவர்களுக்கு நான் எந்த விதத்திலும் உதவ முடியவில்லை. ஆயினும், என்னதான் இருந்தாலும், இவை தனிப்பட்ட சிரமங்களே; சொந்தத் துயரங்களே; இதனையும் எங்களிற் பலரும் அறிவோம். இந்தத் துயரங்கள் யாவும் தமது வாழ்க்கையில் யுத்தம் புகும்போது மக்கள் அனுபவித்து வருந்த வேண்டிய ஒரு பொது வான, நாடு தழுவிய பெருந்துயரை அதிகமாக்கி விடுகின்றன. எந்த எழுத்தாளரும் எந்தவொரு கலைஞரும் இதுவரையில் உலகுக்கு எடுத்துச் சொல்லிவிட இயலாததாக வுள்ள மக்களின் துன்ப. துயரங்களை, எங்களது சொந்த, தனிப்பட்ட துயரங்கள் எங்களிடமிருந்து மூடி மறைத்து விட முடியாது. ஒருவரது கரங்களை ரத்தத்தில் நனைக்காமல் இந்தப் போரிலிருந்து மீண்டு கரையேறுவது அசாத்தியமே என்று எழுதினார் ஷோலகோவ், யுத்தம் வியர்வையையும் ரத்தத்தையும் கோரியது. அவற்றை வழங்க மறுத்தால், அது இரட்டிப்புப் பலியை ஏற்படுத்தும். தயக்கத்தின் விளைவுகள் இழப்பை ஈடு செய்ய முடியாதவையாக இருக்கக் கூடும். எனவே இதன்பின் அந்த அச்சி டித்த பக்கத்தில் வார்த்தைகள் கனற்பிழம்பாக , இவ்வாறு

இடம் பெறுகின்றன; <1 உங்கள் உறவினர்களின், ரத்தத்தை

25